Close Menu
    What's Hot

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று கருணாநிதியே கூறி இருக்கிறார்… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு…
    அரசியல்

    ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று கருணாநிதியே கூறி இருக்கிறார்… பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு…

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 05 26 at 12.53.27 PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது அவரே கூறி இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

    சென்னை திருவான்மியூரில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசியதாவது.

    “ஒரே நாடு, ஒரே தேர்தல்” முறை அமல்படுத்தப்பட்டால் அது ஒரே கட்சி தொடர்ந்து ஆட்சி அரியணையில் அமர்வதற்கு தோதாக அமைந்துவிடும் எனக் கூறுகிறார், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.

    ஆனால் அவரின் தந்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களோ தனது சுயசரிதையான “நெஞ்சுக்கு நீதி” என்ற புத்தகத்தில், “அரசு இயந்திரங்களின் செயல்பாடு, நேரம் மற்றும் வளங்களை மீதப்படுத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மீண்டும் அமல்படுத்தப்படுவது அவசியமானது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

    சமீபத்திய 2024 ஆம் ஆண்டு தேர்தல்களில், நாடு முழுவதும் ரூ.1 லட்சம் கோடியை செலவழித்துள்ளோம். இதுவே ஒரே தேர்தலாக இருந்திருந்தால், குறைந்தபட்சம் ரூ.12,000 கோடியை சேமித்திருக்கலாம். அதன் மூலம் மக்கள் நலனுக்கான வளர்ச்சிப் பணிகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி இருக்கலாம். உண்மையில், 1967 ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன.

    எனவே, நம் நாட்டின் வளமையான எதிர்காலத்திற்கும் நாட்டு மக்களின் நேரம், ஆற்றல் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கும் வழி வகை செய்யும் இந்த “ஒரே நாடு, ஒரே தேர்தல்” கொள்கையானது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு திறந்த மனதுடன் விவாதிக்கப்பட வேண்டியது.

    இதுகுறித்த கருத்தரங்கில் கலந்துகொண்டு தனது இனிய வருகையால் நம்மை கௌரவித்ததோடு, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்திய ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவர்களுக்கு மீண்டுமொருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்..

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகருணாநிதி ஆதரித்ததை, ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்.?- பவன் கல்யாண்
    Next Article பக்ரீத் பண்டிகைக்கு முன் அனகாபுத்தூர் மக்கள் அகற்றம்: மக்கள் போராட்டத்தால் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    மத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் மாநாடு – ஜூன் 17-இல் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    June 13, 2026

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    June 13, 2026

    நிதிநிலை குறித்து விரைவில் வெள்ளை அறிக்கை – நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆவின் ‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா..?? தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்..!!

    ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்!. அரையிறுதியில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

    ஜூன் 22.. CM விஜய்க்கு 52வது பிறந்த நாள்..!! செலிப்ரேஷன் எங்க தெரியுமா..??

    ஆவின் பால் உற்பத்தியை நிறுத்தக் கூடாது: நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

    மத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் மாநாடு – ஜூன் 17-இல் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.