மே 14ஆம் தேதி வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் கருப்பு திரைப்படம் மே 15ஆம் தேதியான இன்று வெளியாகிறது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா  – த்ரிஷா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம்  மே 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சிறப்பு காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணப் பிரச்சினை காரணமாக மே 14ஆம் தேதி தமிழ்நாட்டில் படம் வெளியாகாமல் தள்ளிப்போனது.  அதே நேரம் வேறு மாநிலத்தில் வெளியானதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜனநாயகன் படம் போன்று கருப்பு திரைப்படமும் இணையத்தில் வெளியானதாக பரபரப்பு நிலவுகிறது.
படம் வெளியாகாதது குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியும் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியாகிறது.  இதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அன்புள்ள அனைவருக்கும்…
எங்களுடன் இருந்ததற்கு நன்றி!  #கருப்பு #வீரபத்ருடு இன்றிலிருந்து எனப் பதிவிட்டு கருப்பு போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version