இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

அதன்படி,

தமிழ்நாடு:

* அன்புமணி ராமதாஸ், எம். சண்முகம், என்.சந்திரசேகரன், முகமது அப்துல்லா, வைகோ, பி. வில்சன் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அசாம்:

* மிஷன் ரஞ்சன் தாஸ், பிரேந்திர பிரசாத் பைஷ்யா ஆகிய இரு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த காலியாகவுள்ள மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதே தேதியில் (ஜூன் 19) குஜராத், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நேற்று (மே 26) அறிவித்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version