Close Menu
    What's Hot

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்
    Featured

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    Editor web2By Editor web2July 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்க மனு தொடர்பாக, இருதரப்பினரிடமும் கூடுதல் விளக்கம் பெறுவதற்காக நேரில் ஆஜராகுமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு தமிழக சட்டமன்றச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

    தமிழக சட்டமன்றச் செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த மே 13, 2026 அன்று எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த தகுதிநீக்க மனு தொடர்பாக, அதற்கு பதிலளித்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் விளக்கங்கள் மீது கூடுதல் தெளிவு தேவைப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதையடுத்து, 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் (கட்சி மாறுதல் காரணமாக தகுதியின்மையாக்குதல்) விதிகள் பிரிவு 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் கடந்த ஜூலை 3 அன்று முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் இசக்கி சுப்பையாவையும், ஜூலை 9 அன்று முன்னாள் எம்.எல்.ஏ.க்களான சத்தியபாமா, எஸ். ஜெயக்குமார் மற்றும் கே. மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்கள் அளித்த விளக்கங்கள், தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி அளித்த மனுக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின்னர், இருதரப்பினரிடமும் மேலும் சில விளக்கங்களை பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக பேரவைத் தலைவர் கருதியுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில், குறிப்பிட்ட நாளில் பேரவைத் தலைவர் அறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், அவர்கள் விளக்கம் அளிக்கும் போது, மனுதாரரான எடப்பாடி பழனிசாமியும் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக சட்டமன்றச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான தகுதிநீக்க விவகாரத்தில் சட்டமன்றத் தலைவர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    AIADMK EdappadiPalaniswami PoliticalNews TamilNaduAssembly
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!
    Next Article மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்
    Editor web2
    • Website

    Related Posts

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    July 26, 2026

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

    July 26, 2026

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    July 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லி போராட்டம் எதிரொலி: பஞ்சாபிலும் அமைச்சர்கள் பதவி விலக எதிர்க்கட்சிகள் தீவிர வலியுறுத்தல்!

    கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு: மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

    மாணவர் போராட்டத்தின் அடிப்படை காரணம் என்ன? – ஜெய்ராம் ரமேஷ் விளக்கம்

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு: எடப்பாடி பழனிசாமிக்கு சட்டமன்றச் செயலாளர் கடிதம்

    கருங்கடல் தாக்குதல்கள்!. வணிக கப்பல்களில் பணிபுரியும் இந்தியர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.