Close Menu
    What's Hot

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»நிதி நெருக்கடியிலும், தவெக அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
    Featured

    நிதி நெருக்கடியிலும், தவெக அரசு திட்டங்களை செயல்படுத்துகிறது – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    015 kas A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோபிசெட்டிபாளையம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கீரிப்பள்ளம்  ஓடையில் உள்ள அடைப்புகள் மற்றும் ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று  துவக்கி வைக்கப்பட்டன.

    தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, கொடியசைத்து இப்பணிகளைத் துவக்கி வைத்தார். ஈரோடு தனியார் மருத்துவமனையின்  பங்களிப்புடன்  இணைந்து இந்தத் தூர்வாரும் பணிகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    015 kas

    நிகழ்ச்சியைத் துவக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்,

    நிரந்தர முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில், தமிழகம் இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் சீரோடும் சிறப்போடும் நடைபெற்று வருகின்றன.

    நிதி நெருக்கடி உள்ள சூழ்நிலையிலும் கூட, அதற்கான நிதிகளை எவ்வாறு திரட்டுவது என்று ஆராய்ந்து திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இது சம்பந்தமாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஆய்வுக் கூட்டம் மூலமாக ஒவ்வொரு துறை சார்பாக என்னன்னு திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமா அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு ஆணையிட்டுள்ளார்.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு எழுச்சிமிக்க நிலையை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக, முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே ஐந்து ஆண்டு கால திட்டத்திற்காக 463 திட்டங்கள் அடங்கிய பக்கங்களை வெளியிட்டு, இந்தியாவில் யாரும் செய்திட முடியாத சாதனைகளைத் தமிழக அரசு படைத்து வருகிறது.

    மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே ஓடையைத் தூர்வாரி, ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஈரோடு தனியார் மருத்துவமனையின்  பங்களிப்போடு துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    கடந்த ஆட்சிக் காலத்திலேயே இப்பகுதியில் முதற்கட்டமாக 5 கோடி 20 லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. நகராட்சியின் முழு ஒத்துழைப்போடு இப்பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்.

    கீரிப்பள்ளம் ஓடை தூர்வாரும் பணிகள்  தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இதனை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று விரைவில் நிரந்தரத் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

    Financial Crisis K A Sengottaiyan KA Sengottaiyan Tamil Nadu government Tamilaga Vettri Kazhagam TVK
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“முதல்வரும் நடிகர் தான், எங்க அண்ணனும் நடிகர் தான்!” –சூர்யா ரசிகர்கள், போலீசார் இடையே வாக்குவாதம்!
    Next Article அமெரிக்க செனட்டர் லின்ட்சி கிரஹாம் மறைவு; ‘மிகச் சிறந்த தேசபக்தர்’ என டிரம்ப் இரங்கல்
    Editor TN Talks

    Related Posts

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    July 12, 2026

    அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி

    July 12, 2026

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவை வேளாண் கல்லூரி மாணவி மர்ம மரணம்: நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்!

    அக்னியை அணைத்த தேகம் ; காற்றில்  கலந்தது கீதம் – விடைபெற்றார் பாடகி எஸ். ஜானகி

    நெல்லை டவுன் அருகே பயங்கரம்: இளைஞர் வெட்டிப் படுகொலை– உறவினர்கள் போராட்டம்!

    வணிகக் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: 11 இந்தியர்களில் 10 பேர் மீட்பு; ஒருவர் மாயம் – இந்தியா கடும் கண்டனம்

    “ராமர் கோயில் விவகாரத்தில் உயர்மட்ட நீதிமன்ற விசாரணை தேவை; நிர்வாகிகள் மீது FIR போடுக!”– காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அவனி பன்சால்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.