Close Menu
    What's Hot

    போலி ரயில் டிக்கெட்டுகளுக்கு முற்றுப்புள்ளி.. ‘Rail One’ செயலி டிக்கெட் முன்பதிவில் புதிய விதிகள்..!!

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து!. 5 மாணவிகள் காயம்!. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!

    ‘விடியல்’ நீக்கம்.. மகளிர் பயணத் திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டிய தவெக அரசு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»துணைவேந்தர் நியமனத்தில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!
    Featured

    துணைவேந்தர் நியமனத்தில் மாநில சுயாட்சி காக்கப்பட வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 sdpi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசுப் பல்கலைக்கழகங்களில் நீண்ட நாட்களாகத் துணைவேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இதனால் கல்வி நிர்வாகம் முடங்கிக் கிடக்கும் சூழலில், துணைவேந்தர்களைத் தேர்வு செய்வதற்கான ‘தேடுதல் குழுவின்’ கட்டமைப்பில் தவெக அரசு மேற்கொள்ளத் துணியும் மாற்றங்கள் அதிர்ச்சியையும், பெருங்கவலையையும் அளிக்கின்றன.

    துணைவேந்தர் தேடுதல் குழுவில் தற்போதுள்ள 3 உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள அறிவிப்பு, ஆளுநர் தரப்பின் அழுத்தங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) பிரதிநிதியை இக்குழுவில் நுழைப்பதற்கான ஒன்றிய அரசின் மறைமுக தந்திரங்களுக்கும் தமிழ்நாடு அரசு பணிந்து போகிறதோ என்ற பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

     “துணைவேந்தர்களை நியமிக்கும் முழு அதிகாரம் மாநில அரசுக்கே வழங்கப்பட வேண்டும்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவை முந்தைய திமுக அரசு கொண்டு வந்தபோது, அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு முட்டுக்கட்டை போட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று மாநில அரசு தனது உரிமைகளை நிலைநாட்டியது. தற்போது இது தொடர்பான மற்றொரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதோடு, மாநில அரசுக்குச் சாதகமாகவே தீர்ப்பு அமையும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. இத்தகைய சூழலில், திடீரென இந்நிலைப்பாட்டில் மாற்றம் செய்வது சற்றும் ஏற்புடையதல்ல.

     எனவே, துணைவேந்தர்கள் தேடுதல் குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தும் திட்டத்தையும், அதில் யுஜிசி பிரதிநிதியைச் சேர்க்கும் ஆபத்தான முடிவையும் தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

    மேலும், கல்வி என்பது மாநிலப் பட்டியலில் நீடிக்க வேண்டிய மிக முக்கிய உரிமையாகும். அதில் ஒன்றிய அரசின் மறைமுக அரசியலுக்கு இடம் தராமல், தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் காக்கவும், மாநில சுயாட்சியைக் காக்கவும் தமிழக அரசு உறுதியான, சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    SDPI State Autonomy University Governance Vice Chancellor appointment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 50%  மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு பெறவேண்டும் – எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை
    Next Article வேலியில் சிக்கிய சிறுத்தை!. பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்!
    Editor TN Talks

    Related Posts

    போலி ரயில் டிக்கெட்டுகளுக்கு முற்றுப்புள்ளி.. ‘Rail One’ செயலி டிக்கெட் முன்பதிவில் புதிய விதிகள்..!!

    July 9, 2026

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து!. 5 மாணவிகள் காயம்!. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!

    July 9, 2026

    ‘விடியல்’ நீக்கம்.. மகளிர் பயணத் திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டிய தவெக அரசு!

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    போலி ரயில் டிக்கெட்டுகளுக்கு முற்றுப்புள்ளி.. ‘Rail One’ செயலி டிக்கெட் முன்பதிவில் புதிய விதிகள்..!!

    ஆட்டோ கவிழ்ந்து விபத்து!. 5 மாணவிகள் காயம்!. அரசுக்கு பெற்றோர்கள் கோரிக்கை!

    ‘விடியல்’ நீக்கம்.. மகளிர் பயணத் திட்டத்திற்கு புதிய பெயர் சூட்டிய தவெக அரசு!

    மோடி ஆட்சியில் கைரேகை திருட்டு –  காங்கிரஸ் கடும் விமர்சனம்

    டெல்லியை புரட்டியெடுக்கும் கனமழை..!! ஆறுகளாக மாறிய சாலைகள்.. தவிக்கும் மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.