Close Menu
    What's Hot

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»விஜய் ஆட்சி அளிப்பதுதான் சரி – பாஜக தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துகிறது – திருமாவளவன்
    Featured

    விஜய் ஆட்சி அளிப்பதுதான் சரி – பாஜக தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்துகிறது – திருமாவளவன்

    Editor TN TalksBy Editor TN TalksMay 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 thirumavalan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனிப்பெரும் கட்சியாக மக்களால் தவெக தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே அவரைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்.  அதுதான் அரசியலமைப்பு சட்டம் காட்டுகிற வழிகாட்டுதல். அவர் உரிமை கோரிய நிலையில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் மேலும் இங்கே குழப்பம் ஏற்படுவதற்கு இடம் கொடுக்கிறார். இது ஏற்புடையதல்ல.

    தவெகவுக்கு ஆதரவு அளிப்பவர்கள் யார் யார் என்னும் பட்டியலை ஆளுநர் கோரமுடியாது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை விஜய் நிரூபிக்க அனுமதிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆளுநர் காலம் தாழ்த்துவது என்பது பாஜக திரைமறைவில் தலையீடு செய்து குழப்பத்தை உருவாக்குகிறது என்னும் ஐயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல.

    எங்களைப் பொறுத்தவரை மக்கள் அளித்த தீர்ப்பின்படி விஜய் ஆட்சி அமைப்பதுதான் சரி. அதற்கு நாங்கள் ஒருபோதும் இடையூறாக இருக்கமாட்டோம்.

    பாரதிய ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே தவெகவை கையாள்கிறது  என நம்புகிறேன். இப்போதும் பாஜக அவரைக் கையாளத் துடிக்கிறது. கட்டுக்குள் வைக்க நெருக்கடி கொடுக்கிறது.

    இந்த நிலையில் கான்கிரஸோடும், இடதுசாரிகளோடும் இணைந்து ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என்பதை நாங்கள் கன்ஸிடர் செய்கிறோம். இதில் உள்ள நல்லது கெட்டது, எதிர்கால அரசியல் போக்குகளை பரிசீலிப்போம் எனக் கூறியுள்ளோம்.

    இத்குறித்த முடிவை முன்கூட்டியே அறிவிக்க முடியாது. மேலும் இடது சாரிகளுடன் பயணிப்பதால் அவர்கள் எடுக்கும் நிலைப்பாட்டை அறிந்து முடிவு எடுப்போம்.

    பாரதிய ஜனதா தவெகவை கையாளும் சந்தேகம் இன்றும் உள்ளது. அதன் அடிப்படையில்தான் முடிவெடுப்பேன்.

    விஜய்க்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுத்துவிட்டு எடுப்பது என்பது தன்னுடைய கைப்பாவையாக விஜய்யை வைக்க மத்திய அரசு முயற்சிக்கிறத என்பதே பொருள். இதற்கு ஏற்ப ஆளுநரும் செயல்படுகிறார்.விஜய்யை உடனடியாக பதவியேற்கச் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டு அரசியலில் மேலும் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என்பதுதான் பொருள்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீர் டுவிஸ்ட்!. ஆளுநரை சந்திக்க எடப்பாடி பழனிசாமியும் நேரம் கேட்பு!
    Next Article எனக்கு ஏன் பாதுகாப்பு? விஜய்க்கு பாதுகாப்பு விலக்கியது ஏன்? விஜய் தரப்பு பதில்..!
    Editor TN Talks

    Related Posts

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    July 1, 2026

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    July 1, 2026

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.