Close Menu
    What's Hot

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இன்னும் ஏன் சரணடையவில்லை… செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி? – மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு!
    Featured

    இன்னும் ஏன் சரணடையவில்லை… செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் கேள்வி? – மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 senthil balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த மனுக்களில், ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தங்களுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் நிபந்தனையை கண்டிப்புடன் பின்பற்ற தயாராக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கணக்கு தீர்க்க வேண்டியுள்ளதாக வெளிப்படையாக கூறியுள்ளதாகவும், அதன்படி, ஏதேனும் ஒரு வழக்கில் தங்களை கைது செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குதிரை பேர வழக்கில் தங்களை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை என உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கிய பின்னும், தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

    சட்டப்படியான எந்த புலன் விசாரணையயும் தடுக்கவில்லை என்றும், காவல் துறையில் நிலுவையில் உள்ள ஏதேனும் வழக்குகளின் விசாரணைக்கு தாங்கள் தேவைப்படுவதாக இருந்தால், பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் 35(3) வது பிரிவின் கீழ் முறையாக நோட்டீஸ் அனுப்ப காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எந்த விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதால், சோதனை, விசாரணை என்ற பெயரில் தங்களை துன்புறுத்தக் கூடாது என காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இந்த மனுக்கள், நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுவில் பொத்தாம் பொதுவான உத்தரவை கோருவதாலும், பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளதாலும், மனுவுக்கு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரிக்கை விடுத்தார்.

    செந்தில்பாலாஜி, அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் பெற்ற தங்களை வேறு வழக்குகளில் கைது செய்யக் கூடும் என அச்சம் உள்ளதாகவும், வழக்குகளின் விசாரணையில் தலையிடவில்லை. மாறாக விசாரணைக்கு அழைத்து சட்டப்படி நோட்டீஸ் அனுப்பவேண்டும் என மட்டுமே கோருவதாகவும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்த கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குதிரை பேர வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சரணடைந்து முன் ஜாமீன் பெறவில்லை.  இந்த சூழ்நிலையில், தங்களை துன்புறுத்தக் கூடாது என கோர முடியாது. மற்ற வழக்குகளை பொருத்தவரை, முன்கூட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், மனுதாரர் கோரியபடி எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    High Court order Legal Proceedings Madras High Court Senthil Balaji Tamil Nadu Politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்…  உலக சைக்கிள் பயணம் மேற்கொண்ட பெண் விபத்தில் சிக்கி படுகாயம்!
    Next Article அரசு கல்லூரி மாணவிகள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதி!. அமைச்சர் சம்பத்குமார் தொடங்கி வைத்தார்!
    Editor TN Talks

    Related Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    July 22, 2026

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    July 22, 2026

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது –  ஒன்றிய அரசுக்கு  தவெக எதிர்ப்புக் குரல்

    திருப்பத்தூர்: வீட்டில் பதுக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் செம்மரக்கட்டைகள்; வனத்துறையினர் பறிமுதல்

    “மாணவர்கள் மீதான தடியடி வீடியோக்களை பார்க்க நேரமில்லை”!. அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.