மக்களவையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பேசினார். அப்போது, அனைத்து தரப்பும் இந்த இக்கட்டான சூழலில் அமைதியை கொண்டு வர வேண்டும் என உலக நாடுகள் விரும்புகின்றன. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போரினால் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு மேலாக தொடரும் இந்த போரல் இதனால் உலகப் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல வகைகளில் இந்த சூழல் நம் நாட்டை பாதிக்கிறது. ஒரு கோடி இந்தியர்கள் மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கின்றனர்.

ஹார்முஸ் நீரிணையை மூடியது என்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. ஆனாலும் இந்த நீர்ப்பாதை வழியாக இந்திய கப்பல்கள் தங்கு தடை இல்லாமல் பயணம் செய்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்தியாவில் உள்ள இந்தியர்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் இது மிகவும் கடினமான காலம். இந்தியாவுக்கு தேவையான எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு வினியோகம் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.

போர் தொடங்கியதிலிருந்து மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி அளிக்கப்படுகிறது. போரினால் இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளானர். காயமடைந்தோருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது தூதரகங்கள் மேற்கு ஆசியாவில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்தப் பகுதியில் சிக்கியுள்ள இந்திய சுற்றுலா பயணிகளுக்கும் உதவிய அளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஈரான் நாட்டில் இருந்து ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பி உள்ளனர்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version