இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் குறித்து முப்படை அதிகாரிகள் புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கமாண்டர் ரகு ஆர் நாயர், இரு நாடுகளுக்கு இடையேயும் தரை, வான் மற்றும் கடல் மட்டத்தில் சண்டை நிறுத்தம் எட்டப்பட்டுள்ளதாக கூறினார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தான் மேற்கொண்ட பொய் பிரச்சாரங்கள் குறித்து கர்னல் சோபியா குரேஷி விளக்கம் அளித்தார். இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் மசூதிகளை இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் வதந்திகளை பரப்பியதாக அவர் கூறினார். இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பான எஸ்-400 , பிரம்மோஸ் ஏவுதள அமைப்பை தகர்த்ததாக பாகிஸ்தான் பொய் பிரச்சாரம் மேற்கொண்டது என அவர் கூறினார்.

இந்தியா நடத்திய தாக்குதில் பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார்.
பதான்கோட் , ஸ்ரீநகர் விமான தளங்கள் தாக்கப்பட்டதாக பாகிஸ்தான் பொய்யான பரப்புரை செய்ததாக விங் கமாண்டர் வியோமிகா சிங் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version