அமெரிக்காவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், வெள்ளை மாளிகையைச் சீரமைக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

உள்நாட்டுப் போர்ச் சூழல் மற்றும் பொருளாதாரச் சரிவால் அமெரிக்க மக்கள் அவதிப்பட்டு வரும் வேளையில், வெள்ளை மாளிகையில் சுமார் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,300 கோடி முதல் ரூ.3,800 கோடி வரை) மதிப்பீட்டில் பிரம்மாண்டமான ‘பாலரூம்’ (Ballroom) மற்றும் நவீன வசதிகளை உருவாக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘லிங்கன் பாத்ரூம்’ பகுதியைத் தங்கம் மற்றும் பளிங்கு கற்களால் அவர் சீரமைத்திருப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது. “நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது, அதிபர் தனது குளியலறையைத் தங்கமாக மாற்றுவதில் குறியாக இருக்கிறார்” என எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் சாடி வருகின்றனர்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வாஷிங்டனில் உள்ள ‘நேஷனல் மால்’ (National Mall) பகுதியில் ‘த சீக்ரெட் ஹேண்ட்ஷேக்’ (The Secret Handshake) என்ற கலைக்குழுவினர் ஒரு வினோதமான போராட்டத்தை முன்னெடுத்தனர். அங்கு 10 அடி உயரமுள்ள பிரம்மாண்ட பளிங்கு மேடை மீது தங்கம் போலத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த அரியணையை நிறுவி, அதற்கு “ஒரு மன்னருக்கு ஏற்ற அரியணை” (A Throne Fit for a King) என்று பெயரிட்டுள்ளனர். அதன் அருகே வைக்கப்பட்டிருந்த பலகையில், “நாடு பிளவுபட்டும் பொருளாதாரச் சிக்கலிலும் இருந்தபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை கழிப்பறையைச் சீரமைப்பதில் தான் கவனம் செலுத்தினார்” என டிரம்பைக் கிண்டல் செய்து எழுதியுள்ளனர். இந்த வினோதமான ‘தங்கக் கழிப்பறை’ அரியணை தற்போது உலக அளவில் வைரலாகி வருகிறது.

அந்தச் சிலையில், ‘இரகசியக் கைக்குலுக்கல்’ என்று எழுதப்பட்ட ஒரு கழிப்பறைத் தாள் சுருள் இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர், டிரம்ப் மற்றும் மறைந்த நிதியாளரும் பாலியல் குற்றவாளியுமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைகோர்த்து நிற்பது போல சித்தரிக்கப்பட்ட ஒரு சிலைக்கு, அதே பெயரைக் கொண்ட ஒரு குழு பொறுப்பேற்றதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version