பரபரப்பான சூழலில் நகர்ந்து கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் பல்வேறு மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். அதில் உணவு பழக்கங்களும் முக்கியமான ஒன்றாகும். தலை வாழை இலை போட்டு அறுசுவைகளும் பரிமாறப்பட்டு சாப்பிடப்பட்ட நம்முடைய பாரம்பரியமான உணவு பழக்க வழக்கங்கள் மாறி தற்போது மெல்ல மெல்ல துரித உணவுகளின் ஆக்கிரமிப்பு தொடங்கிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இன்றைய காலகட்டங்களில் சாப்பிடுவதற்கும் உரிய நேரம் கொடுக்காததும் ஒரு மிகப்பெரிய சிக்கலாகவே இருக்கிறது.

அதிகம் சாப்பிடுதல்: ஒருவர் சாப்பிட்ட உணவை பதிவு செய்வதற்கு மூளையானது பொதுவாக 20 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது. இப்படி இருக்கும்போது குறைவான நேரத்தில் சாப்பிட்டு முடித்து விட்டால் வயிறு நிறைந்துவிட்டது என்ற சிக்னலை மூளை கொடுக்காது. அதனால் இன்னும் அதிகமாக சாப்பிட நேரலாம்.

செரிமான கோளாறு: விரைவாக சாப்பிடுபவர்கள் உணவை நன்றாக மென்று சாப்பிட மாட்டார்கள். இதனால் வயிற்றுக்குள் செல்லும் உணவு சரியாக செரிமானம் ஆகாமல், செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு வயிறு உப்புசம், வாயு அசௌகரியம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஆசிட் ரிஃப்லெக்ஸ் : அவசரமாக சாப்பிடுபவர்கள் உணவுகளை நன்றாக மென்று சாப்பிடாத போது உணவு சரியாக உடைபடாமல் வயிற்றில் ஆசிட் ரிஃப்லெக்ஸ் என்னும் அமில அலர்ஜி பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இது மற்ற வயிற்று பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது.

எடை அதிகரிப்பு: வேகமாக உண்பவர்கள் அதிகமாக உண்பதால் நாளடைவில் இது அவர்களுக்கு உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. விரைவாக உண்ணும் பழக்கத்தை தவிர்த்து விடுவதே சிறந்தது.

வளர்ச்சிதை மாற்றங்கள்: வேகமாக உண்ணும் பழக்கத்தை குறைக்காவிட்டால் இன்சுலின் எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பு ஆகிய அதிக அபாயத்துடன் கூடிய தொடர்புடைய நோய்களில் இளம் வயதிலேயே கொண்டு போய் சேர்க்கும் என்பதால் இந்த பழக்கத்தை மாற்றி விடுங்கள்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version