காஞ்சிபுரத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களால் அமைக்கப்படும் நம் ஆட்சியில் என்ன செய்வோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.

நம் ஆட்சியில் எல்லோருக்கும் நிரந்தர வீடு, வீட்டுக்கு ஒரு பைக் இருக்க வேண்டும், வீட்டுக்கு ஒரு கார் இருப்பதும் நம் லட்சியம், வீட்டில் ஒருவர் டிகிரி படித்திருக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்குக்கு வருமானம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம். தரமான அரசு மருத்துவமனைகள் இருக்கும். பருவமழையால் ஊர், மக்கள், விவசாயம் பாதிக்காத அளவு திட்டங்களை உருவாக்குவோம். நெசவாளர்கள், அரசு ஊழியர்களின் நலனை மேம்படுத்துவோம். சட்டம் ஒழுங்கை சிறப்பாக வைத்திருந்து, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம்.

இதனை எப்படி செயல்படுத்துவோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக சொல்வோம். ஏற்கெனவே கொள்கை எதிரி யார், அரசியல் எதிரி யார் என தெளிவாக சொல்லியுள்ளோம். அதில் ஊசலாட்டமே இல்லை. நான் சொன்னதை செய்யாமல் விடமாட்டேன்.

அதென்ன தற்குறி… தவெகவை ஆதரிக்கும் லட்சக்கணக்கான நண்பா, நண்பிகள், ஜென் ஸி கிட்ஸ்களை தற்குறி என சொல்லிவிட்டு, இப்போது அப்படி சொல்லவேண்டாம் என்கிறார்கள். தற்போது நடத்திய அறிவுத்திருவிழாவில் பேசிய ஒரு எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் நம் கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர். இந்த ஆதரவு இனி எல்லா வீட்டிலும் எதிரொலிக்கும்.

இவ்வாறு விஜய் பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version