மாம்பழம் சின்னம் எங்கள் அணிக்கு தான் சொந்தம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த ராமதாஸ், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாம்பழம் சின்னம் எங்களுடையது தான், எங்களுக்கு சொந்தமானது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும், மாம்பழ சின்னம் எங்களுக்கு சொந்தமாகும் என தெரிவித்தார். மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்” என்றார்.
