Close Menu
    What's Hot

    நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 50%  மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு பெறவேண்டும் – எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை

    எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!

    பள்ளி அனுமதிக்காக பணம் வசூலித்து மோசடி ; தனியார் பள்ளி சங்க நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை!. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
    தமிழ்நாடு

    அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை!. புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

    Editor web3By Editor web3July 9, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tn secretariat
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் முறையான அரசின் அனுமதியோ அல்லது பல்கலைக்கழக அங்கீகாரமோ இன்றி செயல்பட்டு வரும் சட்டவிரோத மருத்துவக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத படிப்புகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க தமிழக அரசு களமிறங்கியுள்ளது.

    மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், மருந்தியல், அலைடு ஹெல்த்கேர் முதல் ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் யோகா வரை பல்வேறு துறைகளில் உரிய அங்கீகாரமின்றி சில நிறுவனங்கள் செயல்படுவதாகவும், மாணவர்களிடம் பெரும் தொகையை வசூலித்து மோசடி செய்வதாகவும் புகார்கள் எழுந்தன. இத்தகைய செயல்கள் மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலத்தைப் பாதிப்பதோடு, பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைவதால், இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

    புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்: மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் தலைமையில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைத்து ஒரு கண்காணிப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும்.

    பல்கலைக்கழகங்கள் தங்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ம் தேதி அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.  அங்கீகாரமற்ற நிறுவனம் குறித்த புகார் எழுந்தால், நிபுணர் குழு மூலம் உள்கட்டமைப்பு, கல்வி வசதிகள் மற்றும் அனுமதி குறித்த தீவிர விசாரணை நடத்தப்படும்.

    விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால், ‘பாரதிய நியாய சன்ஹிதா’ (Bharatiya Nyaya Sanhita) சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவித்ததாகக் கூறி, காவல் துறையினருடன் இணைந்து அந்த நிறுவனம் மீது கிரிமினல் வழக்கு பாயும். மேலும், அந்நிறுவனம் உடனடியாக மூடப்படும்.

    அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களும் தங்களின் அனுமதிச் சான்றுகளை வளாகத்திலும் இணையதளத்திலும் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும்.

    மாணவர்கள் தாங்கள் சேரும் கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை அந்தந்த மருத்துவப் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

    medical educational institutions New guidelines released unaccredited
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபனகல் அரசரின் புகழ் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் புகழ் வணக்கம்
    Next Article இயக்குநர் இமயத்தின் 30ஆம் நாள் துக்க நிகழ்வு – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சடங்குகள் செய்து மரியாதை
    Editor web3
    • Website

    Related Posts

    நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 50%  மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு பெறவேண்டும் – எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை

    July 9, 2026

    எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!

    July 9, 2026

    பள்ளி அனுமதிக்காக பணம் வசூலித்து மோசடி ; தனியார் பள்ளி சங்க நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    July 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 50%  மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு பெறவேண்டும் – எஸ்.எஸ்.பாலாஜி கோரிக்கை

    எம்.எல்.ஏ.க்களை வாங்குவதை விட காவிரி நீரை பெற கவனம் செலுத்துங்கள்!.  முதல்வரை சாடிய உதயநிதி!

    பள்ளி அனுமதிக்காக பணம் வசூலித்து மோசடி ; தனியார் பள்ளி சங்க நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி

    காஞ்சிபுரம் : மின்தடையால் விடுமுறை அறிவித்த தனியார் பள்ளி நிர்வாகம்..! பள்ளிக்கு வந்து ஏமாற்றம் அடைந்த மாணவர்கள்..!

    திண்டிவனம்; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்; போலீசாருடன் வாக்குவாதத்தால் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.