2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் நடத்தப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் EPS தலைமையில், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, மற்றும் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த நேர்காணலை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, நேற்று காலை கடலூர், விருதுநகர், திருச்சி, நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அதேபோல், நேற்று மாலையிலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மாவட்டங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது.

அப்போது, தொகுதிகளில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா?, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி தீவிரமாக விசாரித்து வருகிறாராம்.

குறிப்பாக, திமுகவின் விமர்சனத்துக்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாராம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version