தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர். விஜய் சரவணன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட 18,252 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். டெல்டா மண்டலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான தஞ்சாவூரில், ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கையிலிருந்தே தவெக முன்னிலை வகித்து வந்தது. இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விஜய் சரவணன் திமுக வேட்பாளர் சண்முக ராமநாதனை வீழ்த்தி தஞ்சை மண்ணில் தவெக-வின் கொடியை நாட்டியுள்ளார்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படும் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், பாரம்பரியக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்பட்ட தஞ்சாவூரில் தவெக வென்றுள்ளது அரசியல் விமர்சகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவு தவெக-வின் இந்த வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம், தமிழக வெற்றி இகழகம் டெல்டா மாவட்டங்களில் தனது வலுவான அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version