தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து, சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி உள்ளது.

கடந்த 12ம் தேதியில் இருந்து தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை அடைந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. இதன்மூலம் ஒரு லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தங்கம் விலை தொட்டது.

இந்தநிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து, ரூ.12,440-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.224-க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து, ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version