2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது.  பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பகா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு ரொக்கமாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 8ஆம் தேதி  தொடங்கி வைத்தார்.

இதனை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசு ரேஷன் அட்டைதார்கள்,  இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.3,000 ரொக்க வழங்கப்பட்டு வருகிறது.  சுமார் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதாவது கடந்த 11-ந்தேதி வரை 24 ஆயிரத்து 924 ரேஷன் கடைகளில் உள்ள 1 கோடியே 86 லட்சத்து 23 ஆயிரத்து 426 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ.5 ஆயிரத்து 587.02 கோடி விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. 1 கோடியே 39 லட்சத்து 6 ஆயிரத்து 292 வேட்டி, சேலைகளும் வழங்கப்பட்டு உள்ளது.

வேலை நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் வசிப்பவர்கள், அவர்களுடைய ரேஷன் கார்டு சொந்த ஊரில் இருக்கிறது என்றால், அவர்கள் சொந்த ஊரில் உள்ள அவர்ளுடைய ரேஷன் கார்டுக்கு உட்பட்ட ரேஷன் கடையில் மட்டுமே வாங்க முடியும்.

இந்தியாவில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தின் கீழ் வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் கூட தாங்கள் வசிக்கக்கூடிய ஊரிலேயே கைரேகை வைத்து ரேஷன் பொருட்களை வாங்க முடியும். ஆனால் பொங்கல் பரிசு தொகை அப்படி வாங்க முடியாது. தங்களுக்கு சொந்தமான ரேஷன் கடை எதுவோ அந்த ஊருக்கு சென்று அங்கே குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கைரேகை வைத்தால் மட்டுமே பொங்கல் பரிசு தொகையை வாங்க முடியும்.

எனவே வெளியூர்களில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடை ஊழியர்களை தொடர்பு கொண்டு எந்த தேதியில் வந்தால் பொங்கல் பரிசு தொகையை வாங்க முடியும் என கேட்டு தெரிந்துகொண்டு அந்த தேதியில் சொந்த ஊருக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் இன்றுடன் (13-ம் தேதி) வரை  பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதேசமயம் வெளியூரில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊர் திரும்பி பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளும் வகையில் ஜனவரி 14-ம்தேதி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் வெளியூரில் இருந்து வருபவர்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கிக் கொள்ளலாம். எனவே கடைசி வாய்ப்பாக 14-ம் தேதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்கூட்டியே விடுமுறை கிடைக்காத வெளியூரில் வசிப்பவர்கள் ஜனவரி 15-ம் தேதி தைப் பொங்கல் அன்று தான் சொந்த ஊர் செல்ல முடியும் என்பவர்கள் எப்படி பொங்கல் பரிசை பெறுவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version