செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்- – கூடுவாஞ்சேரி நகராட்சி, துலுக்காணத்தம்மன் கோவில் தெருவில், நேற்று காலை, தெரு குழாயில், பெண்கள் சிலர் குடிநீர் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அதே தெருவில் சுற்றி திரிந்த குரங்கு, தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த இரு பெண்களை கடித்துவிட்டு ஓடியது.

பின், அப்பகுதியில் அங்கன்வாடி மையத்திற்கு சென்ற குழந்தைகளையும், தெருவில் நடந்து சென்றவர்களையும் அதே குரங்கு கடித்து விட்டு தப்பியது.
குரங்கு கடிக்கு ஆளாகிய எட்டு நபர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

சம்பவம் அறிந்த வனத்துறையினர், அந்த பகுதிக்கு வந்து, கூண்டுகளை வைத்தனர். ஒரு மணி நேரத்தில், குரங்கு கூண்டில் சிக்கியது. பின், அடர்ந்த வனப்பகுதியில் குரங்கை பத்திரமாக விட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version