Close Menu
    What's Hot

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!
    தமிழ்நாடு

    செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு நடத்தவில்லை!. வருமான வரித்துறை விளக்கம்!

    Editor web3By Editor web3April 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai ID Clarifies
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக எழுந்த புகார்களுக்கு, அந்தத் துறை தற்போது அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவிவித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்துள்ள நிலையில், தன்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் முடக்கி வைக்கும் நோக்கில் இந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு ‘சோதனை’ என்ற பெயரில் மத்திய அரசு அச்சுறுத்துவதாக செல்வப்பெருந்தகை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வருமான வரித்துறை இந்தப் புகார்களை முற்றிலும் நிராகரித்துள்ளது.

    வருமான வரித்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், செல்வப்பெருந்தகை குடியிருக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்திலோ அல்லது அவருக்குத் தொடர்புடைய பிற இடங்களிலோ எவ்வித சோதனையும் நடத்தப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்குச் செல்ல விடாமல் அவரைத் தடுத்ததாகக் கூறப்படும் தகவல்களும் உண்மைக்கு மாறானவை என அந்தத் துறை தெரிவித்துள்ளது. ஆனால், செல்வப்பெருந்தகை தனது பதிவில், ஜனநாயக நடைமுறைகளைச் சிதைக்கவும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கவும் மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதாகத் தீவிரமான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

    இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்திருந்த செல்வப்பெருந்தகை, தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கைகள் சட்ட அமலாக்கம் கிடையாது என்றும், இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டிருந்தார். சுதந்திரமான நடமாட்டம் மற்றும் பேச்சுரிமைக்கு எதிரான இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் அவர் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்திருந்தார். ஒருபுறம் காங்கிரஸ் தரப்பு முடக்கப்படுவதாகக் குற்றம்சாட்ட, மறுபுறம் வருமான வரித்துறை சோதனையே நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ள இந்த முரண்பாடான தகவல்கள் தேர்தல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு 13% குறைந்தது!. மத்திய அரசு!.
    Next Article திருவள்ளூரில் விஜய் ரோடு ஷோ!. புதுமண தம்பதிக்கு வாழ்த்து!
    Editor web3
    • Website

    Related Posts

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    June 22, 2026

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    June 22, 2026

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    June 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஷால் இயக்கி, நடித்துள்ள மகுடம்…! 3 கெட் அப்பில் படத்தின் அப்டேட் விளக்கம்..!

    பிரிட்டன் பிரதமர் ராஜினாமா; சொந்த கட்சியினரே என்னை வேண்டாம் என்கிறார்கள்!. கெய்ர் ஸ்டார்மர் உருக்கம்!

    வாக்குறுதியை நிறைவேற்றுங்க CM!. மண் சோறு சாப்பிட்டு, திருவோடு ஏந்தி விவசாயிகள் உண்ணாவிரதம்!

    பேருந்து நிறுத்தம் இருந்தும் பயனில்லை!. பஸ்கள் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி!

    பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்றம்?. முதல்வருக்கு கேக் வெட்டி, பிச்சை எடுத்து விவசாயிகள் போராட்டம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.