“ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில் திமுகவின் மாபெரும் வீட்டுக்கு வீடு பரப்புரை இயக்கம் இன்று தமிழ்நாடு முழுவதும் தொடங்கியது. இந்த பரப்புரையின் ஒரு பகுதியாக, திமுகவினர் தங்கள் சொந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று மக்களைச் சந்திக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வீடுகளையும் 100% சென்றடையும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ‘மண், மொழி, மானம் காக்க தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும்’ முன்னெடுப்பாகக் கருதப்படும் இந்த பரப்புரையில், எதிர்க்கட்சியினர் வீடுகளுக்கும் திமுகவினர் இன்று முதல் நேரில் சென்று மக்களைச் சந்திக்கவுள்ளனர். இந்த வீட்டுக்கு வீடு பரப்புரை, வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு மக்களின் ஆதரவைத் திரட்டவும், அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.