2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, தான் போட்டியிடவுள்ள 27 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மிக முக்கியமாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் மூத்த தலைவரான பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே மத்திய அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தனது சொந்த மண்ணில் மீண்டும் களம் காண்பது அந்தத் தொகுதி பாஜகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1. தளி – அமர்பிரசாத் ரெட்டி
2. மொடக்குறிச்சி – கிருத்திகா சிவகுமார் (பாஜக NGO பிரிவு மாநில செயலாளர்)
3. அவிநாசி – எல். முருகன்
4. திருப்பூர் தெற்கு – ஏ.பி. முருகானந்தம்
5. சாத்தூர் – நயினார் நாகேந்திரன்
6. திருச்செந்தூர் – கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்
7. நாகர்கோவில் – பொன் ராதாகிருஷ்ணன்
8. பத்மநாதபுரம் – எட்வின் ஜோஸ் (கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர்)
9. குளச்சல் – சிவக்குமார் (கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர்)
10. விளவங்கோடு – விஜயதாரணி
11. திருவண்ணாமலை – அஸ்வத்தாமன்
12. தஞ்சாவூர் – கருப்பு முருகானந்தம்
13. புதுக்கோட்டை – ராமச்சந்திரன் (மாவட்ட தலைவர்)
14. வாசுதேவநல்லூர் – ஆனந்தன் அய்யாசாமி (மாவட்ட தலைவர்)
15. ராமநாதபுரம் – ஜி.பி.எஸ். நாகேந்திரன்
16. ராசிபுரம் (தனி) – டாக்டர் பிரேம் குமார்
17. மயிலாப்பூர் – தமிழிசை சௌந்தரராஜன்
18. ஆவடி – அஸ்வின்
19. கோயம்புத்தூர் வடக்கு – வானதி சீனிவாசன்
20. உதகமண்டலம் – போஜ ராஜன் / உமாதேவி
21. கந்தர்வகோட்டை (தனி) – புரட்சி கவிதாசன்
22. திருப்பத்தூர் – சோழன் பழனிச்சாமி (முன்னாள் எம்எல்ஏ) / மேப்புல் சக்தி
23. அறந்தாங்கி – கவிதா ஸ்ரீகாந்த் (பாஜக மகளிர் அணி மாநில தலைவர்)
24. மதுரை தெற்கு – ராம சீனிவாசன் (மாநில பொதுச் செயலாளர்)
25. ராதாபுரம் – பாலகிருஷ்ணன்
26. திருவாரூர் – பண்ணை வயல் இளங்கோ / பேட்டை சிவா (முன்னாள் மாவட்ட தலைவர்)
27. மானாமதுரை – பொன் பால கணபதி / மா. வெங்கடேசன்
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் பட்டியலில் மயிலாப்பூர் தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அவடி தொகுதியில் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடக்கூடும் என்ற தகவலும் கசிந்துள்ளன. டெல்லி தலைமையின் ஒப்புதலுக்குப் பிறகு, அதிகாரப்பூர்வ பட்டியல் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுத் தாக்கல் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.
