சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.அந்தவகையில் அன்புமணி தரப்பு, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுக – பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டனர். தவெக தனித்து போட்டியிடும் என்றும் விஜய் கூறி வருகிறது. ஆனால் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்ல.

இந்நிலையில், நடந்து முடிந்த கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பதாகக் கூறிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, இதுவரை கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிகவுக்கு, ஒரு மாநிலங்களவை ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மாநிலங்களவை சீட் ஒதுக்காததாலும், கடந்த தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்காததாலும், திமுக உடன் கூட்டணிக்கு செல்ல தேமுதிக நிர்வாகிகள் விரும்புவதாகச் சொல்லப்படுகிறது.

அடுத்தகட்டமாக திருவனந்தபுரத்தில் திமுகவிடம் பிரேமலதா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது, அப்போது, 8 சட்டமன்ற தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதியை தேமுதிக கேட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாம். இந்தநிலையில், தேமுதிகவுக்கு மரியாதை கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி என பிரேமலதா அறிவித்திருந்தார். ஆனால் தேதியை அறிவித்தும், கூட்டணி முடிவை அவர் அறிவிக்காததால் அக்கட்சியினரே அதிருப்தியில் உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version