தமிழ்நாட்டில் பகலில் வெப்பத்தின் தாக்கம் நிலவினாலும் அடுத்த 3 முதல் 4 நாட்கள் மாலை அல்லது இரவு இடி, மின்னலுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொய்வடைந்த நிலையிலேயே நீடிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு மற்றும் நிலவும் ஈரப்பதம் காரணமாக இன்று முதல் 20 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மாலை அல்லது இரவு அல்லது அதிகாலை நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வடகடலோர மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி போன்ற மாவட்டங்களிலும்,
டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும்,
தென் மாவட்டங்களான புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி போன்ற மாவட்டங்களிலும்,
உள்மாவட்டங்களான இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர் , அரியலூர் போன்ற மாவட்டங்களிலும் அடுத்த 3-4 நாட்களில் மாலை/இரவு இடி, மின்னலுடன் கூடிய மழையை எதிர்ப்பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக மதுரையில் 40.8°©, சென்னை மீனம்பாக்கம் 40.5°©, திருத்தணி 40.2°© வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
