சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிகள் அமைப்பதில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், பாஜக- அதிமுக கூட்டணியில் அன்புமணி தரப்பினர் இணைந்துவிட்டனர். மேலும் அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர் முன்னிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்தது. பிறகு அமைச்சர் பியூஷ் கோயல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பியூஸ் கோயல், “பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்தது மகிழ்ச்சி. ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. திமுகவின் ஊழல்கள் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும்.

தமிழ் கலாசாரம் மக்களுக்கு எதிராக திமுக உள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான நல்லாட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும். டிடிவி தினகரனின் வருகை தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version