பாஜக மாநிலத் தலைவராக 2021ஆம் ஆண்டு முதல் இருந்த அண்ணாமலை யின் பதவிக் காலம் ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது. புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பதவி வகித்து வருகிறார். மாநிலத் தலைவராக இருந்தபோது நாள்தோறும் பேட்டி, அறிக்கைகள் என்று தமிழக அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அண்ணாமலை அதன்பிறகு சைலண்ட் மோடுக்குப் போனார். தற்போது தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் மட்டும் அண்ணாமலை இருந்து வருகிறார். அவருக்கு தேசிய அளவிலான பதவி வழங்கப்படும் என்று அமித்ஷா உறுதி அளித்திருந்தாலும் இன்னும் எந்த பதவியும் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அண்ணாமலைக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி கோவையில் அண்ணாமலை களமிறங்கவுள்ளதாகவும் அண்மையில் பேசப்பட்டது. ஆனால், அதிமுக, டிடிவி தினகரனின் அமமுக என பாஜக கூட்டணி வலுவான நிலையில் உள்ளதால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவே போட்டியிடும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில், 2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வாய்ப்பில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, அதற்கு பதிலாக அவருக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்றும் தகவலறிந்தவர்கள் கூறுகின்றனர். ஒருவேளை அப்படி நிகழ்ந்தால் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு இது பயனளிக்கும் என கருதுகிறார்களாம். ஜே.பி.நட்டாவிற்கு பிறகு தேசிய தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து இளைஞரான அண்ணாமலைக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது,

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version