Author: Editor TN Talks

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி பொங்கலை ஒட்டி ரிலீசாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரொடெக்‌ஷன் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஜனநாயகன் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் குறிப்பிட்ட நாளில் ஜனநாயகன் ரிலீசாவது தள்ளிப் போனது. இந்த சூழலில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ்கோரி உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தது.…

Read More

குறிப்பிட்ட நடிகரின் ரசிகர்கள் செய்யும் ரவுடிசம் மற்றும் குண்டாயிசத்தை எதிர்த்து போராட வேண்டியுள்ளதாக கூறியுள்ள சுதா கொங்கராவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. பொங்கலை ஒட்டி ஜனவரி 9ம் தேதி வெளியாக இருந்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியாகவில்லை. ஆனால், பொங்கல் ரேசில் இருந்த பராசக்தி திரைப்படத்திற்கு ஜனவரி 9ம் தேதி தணிக்கை சான்றிதழ் கிடைத்த நிலையில் குறிப்பிட்டபடி ஜனவரி 10ம் தேதி படம் ரிலீசானது. பராசக்தி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் டிரோல் செய்யப்பட்டன. அரசியல் ரீதியான விமர்சனமும் பராசக்தி பத்திற்கு வைக்கப்பட்து. இதேநேரம் ஜனநாயகன் படம் ரிலீசாகததை குறிப்பிட்டு நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த நிலையில் பராசக்தி படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், விஜய் ரசிகர்கள் ரவுடிசம் செய்வதாக குறிப்பிட்டு இருப்பது டிரோலாகி வருகிறது. இது தொடர்பாக பேசிய அவர், அடையாளம் தெரியாத சமூக வலைதள கணக்குகளுக்கு பின்னால் ஒளிந்து…

Read More

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கு 285 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை இந்தியா வெற்றி கொண்டது. அதை தொடர்ந்து இன்று ராஜ்கோட்டில் 2வது ஒருநாள் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் முதலில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 24 ரன்களும், சுப்மன் கில் 56 ரன்களும் எடுத்தும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய கோலி 23 ரன்களும், ஷ்ரேயாஸ் 9 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். தொடர்ந்து ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா ஆட்டத்தை நிதானமாக ஆடினர். இதில் பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்…

Read More

ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் வெடித்த வன்முறைக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்த நிலையில் இந்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஈரான் அரசு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதால் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிரான போராட்டம் கடந்த வாரங்களுக்கு முன்பே தொடங்கி நடந்து வருகிறது. இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் வெடித்த வன்முறையில், அரசின் கட்டிடங்கள், வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஈரான் உச்ச தலைவர் அயதுல்ல அலி கமேனிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்ப்பட்டன. இந்த நிலையில் போராட்த்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சுமார் 2,572 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் கிடைக்கும் போக்குவரத்து…

Read More

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பொங்கல் உலகளாவிய விழா என்றார். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் நாளை கொண்டாடப்படுகிறது. இன்று அதிகாலை போகி பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன் வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி உள்ளிட்டோரும், திரை பிரபலங்களான சிவகார்த்திக்கேயன், ரவி மோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி கெனிஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்வில் பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சியை ரசித்த பிரதமர் மோடி பேசினார். அப்போது, பொங்கல் பண்டிகையை சர்வதேச பண்டிகையாக கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தில் உழவர்களே வாழ்வின் ஆதாரம் என போற்றப்படுகிறார்கள். தமிழ் வாழ்வில் விவசாயிகளின் மகத்துவத்தையும், வேளாண்மையையும் போற்றுவதை பிரதிபலிக்கும் பண்டிகையாக…

Read More

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தபோதும், ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பகுதி நேரம் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து 19வது நாளாக போராட்ட்ம நடத்தி வருகின்றனர். தொடர்ந்து போராடி வரும் ஆசிரியர்களை போலீசார் கைது செய்த சம்பவங்களும் அரங்கேறின. தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்ட த்தில் ஈடுபடுவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் வாடிக்கையாக நடந்து வந்தது. தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்த ஆசிரியர்கள், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்லாமல் போராடுவோம் என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை முகாம் அலுவலகத்தில் ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பொங்கல் நாளில் ஆசிரியர்கள் போராடுவது வேதனை அளிப்பதாக…

Read More

தமிழ்நாட்டிற்கு வந்துள்ள காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். நீலகிரி மாவட்டம் கூட்டலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழாவில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகை தந்தார். கூடலூர் வந்த ராகுல் காந்திக்கு திமுக சார்பில் எம்.பி ஆ.ராசா, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் பள்ளி நிர்வாகம் உற்சாக வரவேற்பும் அளித்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த தோடர் பழங்குடியின மக்கள், ராகுல்காந்திக்கு சால்வை அணிவித்து உற்சாக நடனமாடினர். ராகுல்காந்தியும் பதிலுக்கு அவர்களுடன் சேர்ந்து நடனமாடி மகிழ்ந்தார். பின்னர், நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியின் விழா மேடையில் ராகுல்காந்தி உரை நிகழ்த்திய மழை கொட்டியது. அப்போது நகர்ந்து செல்லாத ராகுல்காந்தி கொட்டும் மழையிலும் நனைந்தபடி மாணவ, மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். அறிவார்ந்த சமூகங்களை ஆசிரியர்களே உருவாக்குகிறார்கள் என்ற ராகுல்காந்தி, மாணவர்கள் மழையில் நனைவதை பார்த்ததும் அவர்களிடம் மன்னிப்பு கோரினார்.

Read More

உலக நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் மாநாட்டுக்கான லோகோவிலும் தாமரையை வடிவமைத்து மத்திய பாஜக அரசு நயவஞ்சகம் செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளன. உலக பிரச்சனைகள், சுற்றுச்சூழல், பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து இந்த அமைப்பு ஆலோசிக்கும். அந்த வகையில் கடந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 17வது மாநாடு பிரேசிலில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பிரிக்ஸ் அமைப்பின் 18வது மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. 2026 ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் மாநாட்டை நடத்த பொறுப்பேற்றுள்ள இந்தியா, அதற்கான புதிய லோகோவை உருவாக்கியுள்ளது. BRICS அமைப்புக்கான லோகோ தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் தாமரை சின்னத்தை குறிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த லோகோ விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.

Read More

2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிலளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேமுதிக யாருடன் கூட்டணி? எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது, விஜய் பிரபாகரன் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது  குறித்து தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனை பெற்று, விருப்ப மனு உள்ளிட்ட நடைமுறைகள் முடித்த பின் ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரேமலதா கேட்டு கொண்டார். முன்னதாக கடலூரில் நடந்த தேமுதிக மாநாடு 2.0-வில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி குறித்து ஏற்கெனவே முடிவெடுத்து விட்டதாகவும் ஆனால் தற்போது அதை அறிவிக்க மாட்டோம்…

Read More

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் நடைபெறும் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையின் அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி அலங்காநல்லூரில் தொடங்குகிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாடு பிடி வீரர்களும், மாடுகளும் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “தை முதல்நாள் தமிழர்களின் கொண்டாட்ட நாள். தமிழ் இனத்தின் பண்பாட்டு பெருமைகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வை பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டின் முதலமைச்சரான நான் ஜனவரி 17ம் தேதி அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின்

Read More