Author: Editor TN Talks
மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மெய்தி மற்றும் குக்கி இன மக்களுக்கு இடையே நடந்த கலவரத்தில் 260 பேர் உயிரிழந்தனர். கலவரம் நீடித்ததால் பைரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகியது. இதனையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. சட்டசபை முடக்கி வைக்கப்பட்டது. கெம்சந்த் சிங் தலைமையிலான புதிய பாஜக அரசு கடந்த 4-ம் தேதி பதவியேற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்த குக்கி இன எம்.எல்.ஏக்களை கண்டித்து சுரசந்த்பூர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடத்தப்பட்டது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைகள், சந்தைகள் மூடப்பட்டு, குறைவான வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் குறைவான நபர்களே வந்திருந்தட்னர். முக்கிய இடங்களில் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டன. முன்னதாக துய்போங் வனத்துறை கேட் அருகே கடந்த 5-ம் தேதி இரவு வன்முறை கும்பலுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. நேற்று…
16வது இளையோர் உலக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 15-ம் தேதி ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் தொடங்கியது. இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோதியது இந்தியா. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய வீரர்கள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக சூர்யவன்ஷி 55 பந்துகளில் சதமடித்து அசத்தினார். . இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 411 எடுத்தது. 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள், சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தனர். அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கலெப் பால்கனர், 67 பந்துகளில் 115 ரன்கள் சேர்த்திருந்தார். இங்கிலாந்து அணி 40.2ஓவர்களில் 311 ரன்களுக்குள் சுருண்டது. இதனால் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6-வது முறையாக யு19 உலகக் கோப்பையில் சாம்பியன்…
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நாளை விருதுநகரில் தென் மண்டல திமுக இளைஞரணி மாநாடு சந்திப்பு நடைபெற உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை விருதுநகரில் திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி 28 திமுக மாவட்டங்களுக்கு உட்பட்ட 31 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த திமுக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. அந்த வகையில் நாளை நடைபெற உள்ள தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் தென்…
மாம்பழம் சின்னம் எங்கள் அணிக்கு தான் சொந்தம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு அடுத்த பழவேலி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்த ராமதாஸ், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மாம்பழம் சின்னம் எங்களுடையது தான், எங்களுக்கு சொந்தமானது, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாகும், மாம்பழ சின்னம் எங்களுக்கு சொந்தமாகும் என தெரிவித்தார். மேலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்” என்றார்.
தவெக சார்பில் விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில் 10,000 மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. ஏற்கனவே அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட்டு நேர்காணலும் முடிவடைந்து விட்டது. இந்த நிலையில் இன்று ( 06.02.2026 ) தேமுதிக சார்பில் தவெக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. இதற்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திலும், பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திலும் தொண்டர்கள் குவியத் தொடங்கினர். குறிப்பாக தவெக அலுவலகம் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக அளவுக்கு அதிகமான மக்கள் கூடினர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ஆர். நிர்மல் குமார், ” தவெகவில் ஒரு மணிநேரத்தில் 10,000 விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் நாளை மனு விநியோகம் செய்யப்படும் என்றார். 14-ம் தேதி…
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பல கட்சிகள் தங்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தேமுதிகவினருக்கு இன்று( 06.02.2016 ) முதல் விருப்ப மனு விநியோகத்தை பிரேமலதா விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் துவக்கி வைத்தார். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12.02.2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “ கூட்டணி குறித்து தற்போது வரை பல கட்சிகள் பேசி வருகின்றன. இருப்பினும், உரிய நேரத்தில் தேமுதிகவின் அதிகாரப்பூர்வமான கூட்டணி முடிவை அறிவிப்பேன்” என்றார். ”விஜயகாந்தின் ஆசீர்வாதத்துடன் இந்த தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெறும் என்றும், தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சி அமைக்கும்” என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். ” அனைத்து கட்சிகளுமே தேமுதிகவுக்குத் தோழமை…
அதிமுக தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை கொடுக்க மட்டுமே செய்வார்கள்; ஆனால் திமுக அதனை நிறைவேற்றும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் ஏற்கனவே 2 கட்டமாக 10 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில் திமுகவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அறிவிப்புகளில் சிலவும் இடம் பெற்றது. இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுக அறிவிப்புகள் குறித்து பேசினார். ”திமுக ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களை அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அப்படியே நகலெடுத்துள்ளதாக பரவலாக கருத்துகள் எழுந்துள்ளன. திமுவை சாராத மற்ற கட்சியினர் கூட, திமுக ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களைத் தான் அதிமுக அறிவித்துள்ளதாக கூறுகின்றனர். அதிமுகவால் தேர்தல் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது திமுக தான்” என தெரிவித்துள்ளார்.
சென்னையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சப்ளை செய்ததாக 2 நடிகைகள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனி, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிகளவில் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட உயர் ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் மெத்தபெட்டமைன் பயன்படுத்திய நெசப்பாக்கம் ஓம் சக்தி நகர் 4வது தெருவை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்ட குன்றத்தூர் கோவூரைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார், கார்த்திக் ராஜா, காட்டுப்பாக்கத்தைச் யஷ்வந்த் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருள் கடத்தி வந்த கார் மற்றும் 3 கிராம் மெத்தபெட்டமைன் 18 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிறகு கைதான 4 பேர் அளித்த தகவலையடுத்து மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் நடராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஓஜி…
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மியின் தலைவரான லக்கி ஓபராய், 8 மணியளவில் ஜலந்தரின் மாடர்ன் டவுனில் உள்ள குருத்வாராவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்துள்ளார். தன்னுடைய ஜீப்பில் ஏறி அங்கிருந்து புறப்பட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். 8 முதல் 10 முறை அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், ஜீப்பின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த லக்கி ஓபராய் மீது குண்டுகள் பாய்ந்தன. இதனையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல, பலத்த காயமடைந்த ஓபராயை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் அமிர்தசரஸில்…
விஜய்யின் தவெக சார்பில் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோம் இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி தொடங்கிய 3 ஆண்டுகளில் முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது விஜய்யின் தவெக கட்சி. நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது, கட்சியை வலுப்படுத்துவது, பூத் கமிட்டி அமைப்பது, புதிய தொண்டர்களை இணைப்பது என தேர்தல் வேலைகளில் வேகம் காட்டி வருகின்றனர் தவெகவினர். இந்த நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள், இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்குள் விருப்ப மனுக்கள் வழங்கப்படவுள்ளது. 14-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிரப்பப்பட்ட மனுக்களை பெற்றுக் கொள்ள மாநில நிர்வாகிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாவும், இந்தக் குழுவிடம்…