Author: Editor web1
கிறிஸ்துமஸ் பரிசாக அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 17ம் தேதி நாட்டு மக்களுக்கு அதிபர் டிரம்ப் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே தெற்கு எல்லையில் நடந்த ஊடுருவல்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார். கடந்த 7 மாதங்களாக சட்டவிரோதமாக ஒரு வெளிநாட்டினரைக் கூட அமெரிக்காவுக்குள் அனுமதிக்கவில்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறிய அதிபர் டிரம்ப், காசா போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தை போற்றும் வகையில், கிறிஸ்துமஸ் பரிசாக வீரர்களுக்கு ஈவுத் தொகை வழங்க உள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். அந்த வகையில் 14.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு கிறிஸ்துமசுக்கு…
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து, சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த 12ம் தேதியில் இருந்து தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உச்சத்தை அடைந்து வருகிறது. அந்தவகையில் கடந்த 15ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. இதன்மூலம் ஒரு லட்சம் ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை தங்கம் விலை தொட்டது. இந்தநிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து, ரூ.12,440-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்றே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதன்படி வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.224-க்கும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரம் அதிகரித்து, ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை கைப்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போரை நிறுத்தி, அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும், இருநாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சில் தீர்வு காணாமல் இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இந்தநிலையில், ரஷ்ய ராணுவ தளபதிகளின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்று பேசிய அதிபர் புதின், பேச்சுவார்த்தைகள் மூலம் இருதரப்பு மோதலை தீர்ப்பதை ரஷ்யா விரும்புவதாக தெரிவித்தார். ராஜாங்க ரீதியில் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தொடர்ந்து முயற்சிக்கும் என்று குறிப்பிட்ட அதிபர் புதின், ராஜதந்திர முயற்சிகள் தடைபட்டால், ரஷ்யா ராணுவ பலத்தை நம்ப தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து…
ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த 15ம் அதேதி புறப்பட்டு சென்றார். முதலில், ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்தார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார். பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவின் ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டின்…
மலேசியாவில் கார் பந்தய மைதானத்தில் அஜித்குமாரை நடிகை ஸ்ரீ லீலா சந்தித்துள்ளதன் மூலம், அஜித்தின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் உறுதியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார், கார் பந்தயத்தின் மீதுள்ள ஆர்வம் காரணமாக சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை அவர் உருவாக்கியுள்ளார். ஜெர்மனி, துபாய், இத்தாலி நாடுகளில் நடைபெற்ற கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு அஜித்குமார் பரிசுகளை வென்று அசத்தி வருகிறார். அதேவேளையில் திரைப்படங்களிலும் அஜித்குமார் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றநிலையில், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளார். இது, அஜித்தின் 64வது திரைப்படமாகும். இந்த படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…
தமிழகம் முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்தில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 884 வழக்குகளில், 857 கோடியே 77 லட்சத்து 65 ஆயிரத்து 260 ரூபாய் தீர்வுத் தொகை வழங்கி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் இன்று (டிச. 13) தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், 6 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், 3 அமர்வுகளும், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் 516 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த லோக் அதாலத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த 96 ஆயிரத்து 358 வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத 7 ஆயிரத்து 526 வழக்குகள் என மொத்தம் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 844 வழக்குகளில், 857 கோடியே 77…
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்க்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அல் கிரீன், அதிபர் டிரம்புக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்கு தீர்மானத்திற்கு 47 ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். தீர்மானத்துக்கு எதிராக 140 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதனால், அதிபர் டிரம்புக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் அதிபர் டிரம்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டாவது பதவி நீக்க தீர்மானமாகும். பாதுகாப்பான சூழல், வரிக்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அதிபர் டிரம்பின் கொள்கை தோல்வி அடைந்ததாக விமர்சித்து நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு ஐதராபாத் சென்ற பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தார். அர்ஜெண்டினா கால்பந்து அணியின் கேப்டனான லியோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் தனது 70 அடி உயர சிலையை காணொலி மூலம் திறந்து வைத்த அவர், மைதானத்தில் நடந்து சென்று ரசிகர்களை சந்தித்து, அவர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். முன்னதாக கோலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மெஸ்ஸி சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனையடுத்து, கொல்கத்தா பயணத்தை முடித்துக் கொண்டு மாலை ஐதராபாத் சென்ற மெஸ்ஸிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜீவ் காந்தி மைதானத்திற்கு சென்ற மெஸ்ஸியை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ‘மெஸ்ஸி மெஸ்ஸி’ என ஆரவாரமாக முழக்கங்கள் எழுப்பி வரவேற்றனர். மைதானத்தை சுற்றி வந்த அவர், ரசிகர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். பின்னர் நடந்த பயிற்சி…
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாகவும், வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்வதை தடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச. 13) நடைபெற்றன. இதில், ஆளும் இடதுசாரிகள் கூட்டணி (LDF) பின்னடைவை சந்தித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி (UDF) அதிக இடங்களை வென்றுள்ளது. மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி (NDA) கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணியின் தோல்வி குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் எதிர்பார்த்த பெருவெற்றியை அடைய முடியாததற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி விரிவாக ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளார். தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் முன்னேறுவோம் என்று அவர் கூறியுள்ளார்.…
திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெற்ற வெற்றி என்பது கேரள அரசியலில் ஒரு திருப்பு முனையாகும் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்துள்ள கேரள உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி (LDF) பின்னடைவைச் சந்தித்துள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கூட்டணி (UDF) பெரும்பான்மையை இடங்களை பிடித்துள்ளது. இந்தநிலையில், பாஜக தலைமையிலான (NDA) கூட்டணி மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கேரள அரசியலில் இது ஒரு திருப்புமுனையாகும் என குறிப்பிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜக மற்றும் என்டிஏ வேட்பாளர்களுக்கு வாக்களித்த கேரள மக்கள் அனைவருக்கும் தனது நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார். கேரளாவின் வளர்ச்சியை முழுமையாக அடைவது பாஜவால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த துடிப்பான நகரத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் வாழ்க்கைத்…