Author: Editor web3
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக எழுந்த புகார்களுக்கு, அந்தத் துறை தற்போது அதிகாரப்பூர்வமாக மறுப்புத் தெரிவிவித்துள்ளது. முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்துள்ள நிலையில், தன்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் முடக்கி வைக்கும் நோக்கில் இந்தி பேசும் அதிகாரிகளைக் கொண்டு ‘சோதனை’ என்ற பெயரில் மத்திய அரசு அச்சுறுத்துவதாக செல்வப்பெருந்தகை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வருமான வரித்துறை இந்தப் புகார்களை முற்றிலும் நிராகரித்துள்ளது. வருமான வரித்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், செல்வப்பெருந்தகை குடியிருக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் இல்லத்திலோ அல்லது அவருக்குத் தொடர்புடைய பிற இடங்களிலோ எவ்வித சோதனையும் நடத்தப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சாரத்திற்குச் செல்ல விடாமல் அவரைத் தடுத்ததாகக் கூறப்படும் தகவல்களும் உண்மைக்கு மாறானவை என அந்தத்…
கடந்த மாதம் சமையல் எரிவாயு (LPG) பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் சரிவைச் சந்தித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் மாதத்தில் மட்டும் சமையல் கேஸ் சிலிண்டர் பயன்பாடு சுமார் 13% குறைந்துள்ளது. புள்ளிவிவரப்படி, கடந்த மார்ச் மாதத்தில் 23 லட்சத்து 79,000 டன் சமையல் எரிவாயு பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டான 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 27 லட்சத்து 29,000 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமையல் எரிவாயு பயன்பாடு குறைந்துள்ள அதே வேளையில், வாகன எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதத்தில் பெட்ரோல் விற்பனை 7.6% மற்றும் டீசல் விற்பனை 8.1% அதிகரித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து தேவைகள் அதிகரித்துள்ளதைக் காட்டினாலும், சமையல் கேஸ் பயன்பாடு குறைந்தது ஏன் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு முக்கியக் காரணமாக, நாடு முழுவதும் நிலவிய எரிபொருள் தட்டுப்பாட்டினால் சிலிண்டர்…
தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மணிமங்கலத்தில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செல்வப்பெருந்தகை வீட்டிலும் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க செல்வப்பெருந்தகை வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, பிரசாரத்துக்கு செல்ல விடாமல் இந்தி பேசும் வருமான வரித்துறையினர் தன்னை சிறைப்பிடித்துள்ளதாக செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும்…
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று (ஏப். 19) மாலை பயங்கர வெடி விபத்து நிகழ்ந்தது. விடுமுறை நாளான நேற்றும் (ஞாயிற்றுக்கிழமை) தொழிலாளர்கள் 20க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பட்டாசு வெடித்துச் சிதறி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது. சிறிது நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த தீயணைப்புத் துறையினர், பட்டாசு ஆலையில் பற்றி எரிந்த தீயைக் கட்டுப்படுத்தினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பஞ்சவர்ணம் என்பவர் உயிரிழந்துள்ளார். பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரில் 18 பேர் பெண்கள் என்பது…
ஜம்மு – காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலை ராம்நகர் பகுதியிலிருந்து உதம்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று, மலைப்பாதையில் பயணித்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சீறிப்பாய்ந்த அந்தப் பேருந்து, சாலையோரம் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் தலைகீழாகக் கவிழ்ந்து உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பேருந்து கவிழ்ந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புப் படையினர், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம்…
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளையோடு முடிவடைய இருப்பதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சோடு இயங்கி வருகின்றன. இந்த சூழலில்தான் தமிழ்நாட்டின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் ஐ.டி ரைடு நடந்து வருகிறது. இதுகுறித்து அவர் தனது எக்ஸ் படத்தில் பதிவு ஒன்றே போற்றி போட்டிருக்கிறார். அதில் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகின்ற இந்த சூழலில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் தன்னை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குள் முடக்கி வைத்துள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். மேலும் ஜனநாயக செயல்பாடுகளை தடுக்கவும் எதிர்கட்சியின் குரலை ஒடுக்கவும் மேற்கொள்ளப்படும் அரசியல் எனவும் பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை காங்கிரஸ் கட்சியை ஒடுக்குவதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் நாளையோடு முடிவடைய உள்ள சூழலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்தொகுதிக்குள் தன்னை முடக்கி வைத்துள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் குறிப்பிட்டு இருப்பது சலசலப்பை கிளப்பியிருக்கிறது. மேலும் தேர்தலுக்கு மிக…
தமிழக அரசியல் களத்தில் நுழைந்த சில நாட்களிலேயே விஜய் – சங்கீதா விவகாரம் தமிழகத்தில் மிகபெரிய அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. விஜய்யிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று கூறி கடந்த டிசம்பர் மாதம் குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சங்கீதா. அந்த வழக்கு ஏப்ரல் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்று கூறப்பட்டது. விஜய் மீது சங்கீதா வைத்த புகாரால் தான் அந்த விவாகரத்து வழக்கு மீது மக்களின் கவனம் திரும்பியது. ஃபேமிலி மேன் என்று பெயர் எடுத்த விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவு இருப்பதாக புகார் தெரிவித்தார் சங்கீதா. கடந்த 2023-ம் ஆண்டு முதல் விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்வதாக வதந்திகள் பரவின. குறிப்பாக, விஜய்யின் வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழா மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மணிவிழா போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் சங்கீதா பங்கேற்காதது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.…
சமீபத்தில் வெளியான ஒரு பெரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் ஆய்வில், அதிக தனிமையை உணரும் நபர்களுக்கு இதய வால்வு நோய் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இன்றைய காலத்தில் கூட்டமாக வாழ்ந்தாலும் பலர் தனிமையை உணர்கிறார்கள். ஆனால், இந்தத் தனிமை ஒரு மனநிலை மட்டுமல்ல, அது கடுமையான உடல் நோய்களையும் ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில், அதிகத் தனிமையை உணரும் நபர்களுக்கு இதய வால்வு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று அதிர்ச்சியூட்டும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு அமெரிக்க இதய சங்கத்தின் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. பெரியவர்களிடையே தனிமை, இதய வால்வு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இதயத்தில் சரியான இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் நான்கு முக்கிய வால்வுகள் உள்ளன. இந்த வால்வுகளில் ஏதேனும் ஒன்று செயலிழக்கும்போது, அது வால்வு இதய நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நிலை, இதயத்தின் வழியாகச் செல்லும் சரியான இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இது இதயத்தின்…
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். ஐபிஎல் 2026 தொடரில் இன்று, ஏப்ரல் 18, சனிக்கிழமை இன்று, இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும். போட்டிக்கு முன்னதாக, தோனி இந்தப் போட்டியில் விளையாடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தோனியை களத்தில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். https://x.com/ChennaiIPL/status/2045048651777728645? நேற்று வெள்ளிக்கிழமை தோனி வலைப்பயிற்சியில் சிக்ஸர் அடிக்கும் வீடியோவை சென்னை அணி பகிர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ ரசிகர்களிடையே ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. தொடரின் முதல் இரண்டு வாரங்களுக்கு தோனி விளையாடாமல் இருக்கலாம் என்று மார்ச் 28 அன்று அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது அந்தக் காலக்கெடு முடிந்துவிட்டது. தோனியின் பங்கேற்பு குறித்து சென்னை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. டைம்ஸ் ஆஃப்…
பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். தமிழ்நாடு வரலாறுதமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை…