Author: Editor web3
கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் இணைந்து வானதி சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் திமுகவினர் அராஜகப் போக்கை கையாளுவதாகக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, கடந்த சில நாட்களாக கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்று கோவையில் முகாமிட்டு, காவல்துறையினரையே மிரட்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சியினரைத் தாக்கி அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைப்பதாக வானதி சீனிவாசன் பகிரங்கமாகத் தெரிவித்தார். “கோவை வடக்கு தொகுதியில் ஒரு வாக்கிற்கு ரூ.2,500 வரையிலும், செந்தில் பாலாஜி போட்டியிடும் தொகுதியில் ரூ.5,000 வரையிலும் விநியோகம் செய்யப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் மணல் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைக் கொண்டே இந்த தேர்தல் வேலைகள் நடைபெறுவதாக அவர் தனது பேட்டியில் சாடினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கோவையைப் பழிவாங்கும் நோக்கத்தோடு…
கோவையில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசனை தனது இருசக்கர வாகனத்தில் அமரவைத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையொட்டி, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அண்ணாமலை இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார். சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வானதி சீனிவாசன், தற்போது குணமடைந்து மீண்டும் களமிறங்கியுள்ள நிலையில், அண்ணாமலையுடன் இணைந்து மேற்கொண்ட இந்தப் பயணம் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினர் இடையே பனிப்போர் நிலவுவதாகக் கூறப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அண்ணாமலை ஸ்கூட்டரை ஓட்ட, அதன் பின்னால் வானதி சீனிவாசன் அமர்ந்து கொண்டு வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினர். கணபதி…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோவுடன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… https://x.com/mkstalin/status/2046397253879808506?s=46 அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சியே நமது முதல் குறிக்கோள். கலைஞரை விட More Danger என என்னை சொல்லும்போது ஒன்றே ஒன்றுதான் என் நினைவுக்கு வருகிறது. தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கும் நான் என்றுமே டேஞ்சர் தான். பாஜக மாதிரியான மதவாத கட்சிகள், திமுகவை இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்கின்றனர். திமுக ஒருபோதும் இந்துக்களுக்குஎதிரான கட்சி அல்ல. சிறுபான்மையினருக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் துணை நிற்பதும் திமுகதான். தமிழ்நாட்டில் திமுக இருக்கும் வரை பாஜக வெல்ல முடியாது என்பதை வரலாறு சொல்லும். நமது உரிமை, கலாச்சாரம்,…
தமிழக வெற்றிகழக தலைவர் விஜய் எக்ஸ் தள பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் என் சொந்தங்களாகிய தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஆசையோடும் அன்போடும் எனக்காக எல்லாவற்றையும் அள்ளி அள்ளித் தந்த உங்களோடு உங்கள் விஜய் மனம் விட்டுப் பேசவே இக்கடிதம். எனக்கு எல்லாமும் தந்த என் சொந்தங்களான தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தவே அரசியலுக்கு வந்த நாள்முதல் சொல்லொணா நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் சொல்லவியலா வேதனைகளையும் இதுவரை நமக்கு விளைவித்தே வந்தவர்கள் வேறு யார்? நமது அரசியல் எதிரியான மக்கள் விரோத தீயசக்தி திமுகவும் கொள்கை எதிரியான மற்றும் பலருடன் களம் கானும் பிளவுவாத சக்தியான பாஜகவும் என்று நம் மக்களே அறிவர். மக்களுக்காக அவர்தம் நலன்களுக்காக மட்டுமே அரசியலுக்கு வந்த இந்த விஜய், பாசிச மனநிலை கொண்ட ஜனவிரோதக் கட்சிகளின் அழுத்தங்களுக்கா அடிபணிவான்?. திசைதிருப்பல் முதலீட்டுக் கழகங்களின் நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் குனிந்து கூழைக் கும்பிடா போடுவான்?. ஆதாயங்களைக் காட்டி உங்கள்…
எப்போதோ அவர்களுக்குள் சமரசமாகி கையெழுத்தான விஷயத்தை இப்போது கொண்டு வர வைத்திருக்கிறார்கள் என விவாகரத்து குறித்து SA சந்திரசேகர் பேசியுள்ளார். இது அரசியலாக்கப்படுவது எதிர்கட்சிகளின் திட்டம்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே நடந்த பிரச்னை பொதுவெளிக்கு வந்து விவாகரத்தில் நிற்கிறது. நேற்று செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று அவர்கள் விவாகரத்து வழக்கு விசாரணைக்கும் வந்தது. அதனை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. சூழல் இப்படி இருக்க இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேக இவ்வளவு பரபரப்புக்கு மத்தியில் பேட்டி கொடுத்து சர்ச்சைகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கிறார். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள்ளும், அவரது ரசிகர்களுக்குள்ளும் முதல்முறையாக விதைத்தவர் என்றால் அது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். அதனால்தான் விஜய்யின் ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட பணிகள் செய்ய வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழக வெற்றிக் கழகமும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இன்று( ஏப்ரல் 21 ) முதல் ஏப்ரல் 26 வரை அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். இதனைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்துச் சோதனைச் சாவடி ஆய்வாளர்கள் அடங்கிய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் ஆம்னி பேருந்துகளைத் தீவிரமாகச் சோதனை செய்வார்கள் என்றும், விதிமீறலில் ஈடுபடும் பேருந்துகளின் அனுமதி (Permit) ரத்து செய்யப்படும் என்றும் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரித்துள்ளது. புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு: பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க, மண்டல வாரியாகப் புகார் எண்களைத்…
தமிழகத்தில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலில், 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காகக் கொண்டு மாநில அரசுப் போக்குவரத்து கழகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்தல் நாளன்று முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வர அரசுப் பேருந்துகளில் முற்றிலும் இலவசமாகப் பயணம் செய்யலாம். நீண்ட தூரம் நடக்க இயலாத முதியோர்களுக்கும், பயணச் சிரமங்களை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த வசதி பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. சாதாரணக் கட்டணப் பேருந்துகள் மற்றும் மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் இந்தச் சலுகை நடைமுறைப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த இலவசப் பயணச் சலுகையைப் பெற விரும்பும் வாக்காளர்கள், பேருந்தில் ஏறும்போது தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய சான்றிதழைக் காண்பித்தால் போதுமானது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்குச் சாவடிகளில் இவர்களுக்கு அளிக்கப்படும் முன்னுரிமையுடன், தற்போது இந்தப் போக்குவரத்து வசதியும் இலவசமாக இணைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், பிரதமர் நரேந்திர மோடியின் எதார்த்தமான ஒரு செயல் இணையத்தில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. ஜார்கிராம் பகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டுத் திரும்பிய பிரதமர், சாலையோரம் இருந்த ஒரு சிறிய ‘ஜால்முரி’ (காரப்பொரி) கடையைக் கண்டு திடீரெனத் தனது வாகனத்தை நிறுத்தினார். ஒரு நாட்டின் பிரதமர் எவ்வித பந்தாவும் இன்றி காரிலிருந்து இறங்கி வந்து, சாதாரணமாக நின்றபடி காரப்பொரியைச் சுவைத்த விதம் சமூக வலைதளவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது. விக்ரம் குமார் என்ற அந்தச் சிறு வியாபாரியிடம் கனிவுடன் உரையாடிய பிரதமர், ஜால்முரியின் ருசியைப் பாராட்டியதோடு அதற்கான தொகையையும் கொடுத்துவிட்டுச் சென்றார். இந்தச் சந்திப்பின் போது பிரதமர் அடித்த ஒரு நச் நகைச்சுவைதான் இப்போது சமூக வலைதளங்களில் ‘மீம்’ (Meme) மெட்டீரியலாக மாறியுள்ளது. ஜால்முரி தயார் செய்தபோது கடைக்காரர் “வெங்காயம் சேர்க்கட்டுமா?” என்று கேட்டதற்கு, “நான் வெங்காயம் சாப்பிடுவேன், ஆனால் யாருடைய…
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கோபத்தை அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே, சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்ததாக வந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியும் கோபமும் அளிக்கிறது. இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவது, திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு என்பதே இல்லாத நிலை ஆகிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கட்டுக்கடங்காத போதைப் பொருள் புழக்கம், சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ, குற்றவாளிகளுக்கு எந்த அச்சமும் இல்லாத நிலை என, தமிழகம் ஒரு இருண்ட நிலைக்குப் போய்விட்டது. இவற்றைச் சரிசெய்து, தமிழகத்தை மீட்டெடுக்கவே, சில காலம் தேவைப்படும். இத்தகைய மோசமான சூழலில், திமுக ஆட்சி, இன்று தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும்…
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 21) தங்கம் விலையில் பெரிய மாற்றமின்றி மந்தமான நிலையே நீடிக்கிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறிப்பிடத்தக்க ஏற்ற இறக்கமின்றி காணப்படுவதால், உள்ளூர் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலித்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் தங்கம் விலை உயராமல் இருப்பது ஒருபுறம் நிம்மதியை அளித்தாலும், விலை குறையவில்லை என்பது ஏமாற்றமாகவே பார்க்கப்படுகிறது. தங்கத்தின் விலை சீராக இருக்கும் அதே வேளையில், வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது பொதுமக்களுக்குச் சாதகமான செய்தியாக அமைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கு விற்பனையாகிறது. அதேபோல், தொழில்துறை மற்றும் பெரும் முதலீடுகளில் பயன்படுத்தப்படும் பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 சரிந்து ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் டாலரின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே வரும்…