Author: Editor web3

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு விழிப்புணர்வு மடல் எழுதியுள்ளார். அதில்; திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையவேண்டும் என உங்களில் ஒருவனான நான் நினைப்பதைவிடவும், அன்பு உடன்பிறப்புகளான நீங்கள் நினைப்பதைவிடவும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கொள்கைவழித் தோழமைக் கட்சிகள் எதிர்பார்ப்பதைவிடவும் தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பயன் தந்திருப்பதாலும், பா.ஜ.க. தலைமையில் அ.தி.மு.க. மற்றும் சில கட்சிகள் இணைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியால், அதன் ஒன்றிய அரசால், தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாலும், அடிமை அ.தி.மு.க.வுக்கும் அதனுடன் உள்ள கட்சிகளுக்கும் வாக்களித்தால் அது நேரடியாக பா.ஜ.க.வுக்கு போடும் வாக்குதான் என்பதை உணர்ந்திருப்பதாலும், பீகாரைப் போல தமிழ்நாட்டையும் பா.ஜ.க. பின்வாசல் வழியாக கபளீகரம் செய்துவிடும் என்பதாலும், பா.ஜ.க தலைமையில் அ.தி.மு.க. இணைந்துள்ள கூட்டணியை முறியடித்து, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே…

Read More

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்கள் தங்கள் வாக்குச் சாவடி விவரங்களை அறிந்துகொள்ள தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்தியுள்ளது. பூத் ஸ்லிப் எனப்படும் வாக்காளர் தகவல் சீட்டு கையில் இல்லாதவர்கள், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது பிரத்யேக அலைபேசி செயலி மூலம் எளிதாக விவரங்களைப் பெறலாம். இணையதளத்தில் உள்ள ‘வாக்காளர் பட்டியலைத் தேடு’ (Search in Electoral Roll) என்ற பகுதிக்குச் சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணைச் (EPIC Number) சமர்ப்பிப்பதன் மூலம், தாங்கள் வாக்களிக்க வேண்டிய மையம், அறை எண் மற்றும் முகவரி ஆகியவற்றை ஒரு சில நொடிகளில் திரையில் காண முடியும். இணைய வசதி இல்லாத வாக்காளர்களுக்காகத் தேர்தல் ஆணையம் குறுஞ்செய்தி மற்றும் உதவி எண் சேவைகளையும் வழங்கி வருகிறது. ‘1950’ என்ற இலவச உதவி எண்ணைத் தொடர்புகொண்டு தேவையான தகவல்களைக் கேட்டுப் பெறலாம். அதேபோல், உங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணைத்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடி குறித்து தெரிவித்த கருத்து பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அண்ணாதுரையின் கொள்கைகளுக்கு மாறாக, சமத்துவத்தில் நம்பிக்கையற்ற பாஜகவுடனும், ஒரு ‘பயங்கரவாதியுடனும்’ (பிரதமர் மோடி) அதிமுக எப்படி கூட்டணி வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார். பிரதமரை விமர்சிக்க அவர் கையாண்ட வார்த்தை பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தனது பேச்சு சர்ச்சையானதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதையே தான் அப்படிக் குறிப்பிட்டதாகவும், அவரை நேரடியாகப் பயங்கரவாதி என்று தான் அழைக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், நாட்டின் பிரதமரை இழிவுபடுத்தும் நோக்கில் கார்கே பேசியதாக பாஜக தரப்பு தனது கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற ஆர்வத்துடன் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். நேற்று நள்ளிரவு வரையிலான கணக்கின்படி, சென்னையில் இருந்து மட்டும் சுமார் 1,88,705 பயணிகள் அரசுப் பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. பொதுமக்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் மட்டுமின்றி, கூடுதலாக 1,339 சிறப்பு பேருந்துகளும் நேற்று ஒரே நாளில் இயக்கப்பட்டு கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது. பயணிகளின் வசதியை முன்னிட்டு, கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய முக்கிய பேருந்து முனையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 18,633 பேர் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்து தங்களது பயணத்தை உறுதி செய்துள்ளனர். இன்றும் (புதன்கிழமை) மாலை முதல் மக்களின் வருகை…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி கட்டத் தயார் நிலைகள் குறித்துப் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், இதுவரை 4.81 லட்சம் தபால் வாக்குகள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த முறை 14.59 லட்சம் பேர் முதன்முறையாகத் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர். மாநிலம் முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்துவதற்காக 1,06,418 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பாதுகாப்பிற்காக 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும், 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளின்படி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இதுவரை கணக்கில் வராத ரூ.1,262 கோடி ரொக்கம் மற்றும்…

Read More

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 2025-ம் ஆண்டு இதே நாளில் (ஏப்ரல் 22) சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல் தேசத்தையே உலுக்கியது. இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடையும் நிலையில், உயிரிழந்த அப்பாவி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் தியாகத்தை இந்தியா என்றும் மறக்காது என்று குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்துப் பேசிய பிரதமர், எந்த வடிவத்தில் அச்சுறுத்தல்கள் வந்தாலும் இந்தியா அதற்கு ஒருபோதும் தலைவணங்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகளின் கோழைத்தனமான திட்டங்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், நாட்டை அச்சுறுத்த நினைக்கும் தீய சக்திகளுக்கு எதிரான நமது உறுதிப்பாடு முன்பை விட இப்போது பலமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குலைக்க நினைப்பவர்களுக்கு இந்தியா…

Read More

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.வேலுவின் ஆதரவாளர் சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், கட்டுக்கட்டாக வைக்கப்பட்டிருந்த ரூ.9 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அனைத்தும் ரூ.500 நோட்டுகளாக இருந்ததாகவும், இவை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் மட்டுமின்றி, அந்த வீட்டில் இருந்து வாக்காளர் பட்டியல், முக்கிய டைரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்குப் பணம் விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால் மயிலாப்பூர் தொகுதி திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில்…

Read More

கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,250 என்ற விலையில் சந்தையில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கம் போன்ற காரணங்களால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று முன் தினம் ரூ.60 குறைந்து ரூ.14 ஆயிரத்து 300-க்கு விற்றது. ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 880-ல் இருந்து சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 400-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ரூ.280-க்கும், கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் நேற்று மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஆபரண…

Read More

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபயங்கர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. மீண்டும் போர் மூளும் சூழல் ஏற்பட்டால், தாக்குதல்களை நடத்துவதில் அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு அளிக்கும் அல்லது தங்களது வான்வெளியையும் நிலப்பரப்பையும் அமெரிக்கப் படைகள் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. வளைகுடா நாடுகள் அமெரிக்காவிற்குத் துணை நின்றால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் எண்ணெய் உற்பத்தியே இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றும் ஈரான் ராணுவத் தளபதிகள் எச்சரித்துள்ளனர். ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த புதிய எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் உள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் அமெரிக்கா தனது படைகளைத் குவித்து வரும் நிலையில், இத்தகைய…

Read More

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள பகோய்மா (Pacoima) பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘செஸ்னா 172’ ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், அருகிலுள்ள வைட்மேன் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பிகள் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த விமானம், சாலையோரம் இருந்த வாகன உதிரிபாக விற்பனை நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் தலைகீழாக விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. https://x.com/RT_com/status/2046734080935329851? இந்த கோர விபத்தில் விமானத்தை இயக்கிச் சென்ற 70 வயது மதிக்கத்தக்க விமானி பலத்த காயமடைந்தார். விபத்து நடந்தவுடனேயே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மீட்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, சிதைந்த விமானத்திற்குள் சிக்கியிருந்த அவரை மீட்டனர். தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில்…

Read More