Author: Editor web3

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சுமார் 75,000 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), விவிபேட் (VVPAT) கருவிகள் மற்றும் தேவையான தளவாடப் பொருட்களை அனுப்பும் பணி இன்று காலை முதலே தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் அந்தந்த மையங்களுக்கு இவை கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு இன்று மாலைக்குள் சென்றடைய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மலைக் கிராமங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களைக் கொண்டு சேர்ப்பது அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, ஈரோடு, தேனி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வாகனங்கள் செல்ல முடியாத கரடுமுரடான மலைப் பாதைகளில் கழுதைகள் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக எடுத்துச்…

Read More

ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமான தலைமைத்துவத்தை வழங்கி வந்த டிம் குக், வரும் செப்டம்பர் 2026-ல் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பதவியிலிருந்து விலகுகிறார். ஸ்டீவ் ஜாப்ஸின் மறைவுக்குப் பிறகு, 400 பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் மதிப்பை 4 டிரில்லியன் டாலராக உயர்த்தி, ஆப்பிளை உலகளாவிய சக்தியாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. வயது முதிர்வு மற்றும் சமீபத்திய சந்தை சவால்களைக் கருத்தில் கொண்டு அவர் இப்பதவியிலிருந்து விலகினாலும், நிறுவனத்தின் ‘எக்ஸிக்யூட்டிவ் சேர்மேன்’ என்ற புதிய பொறுப்பை ஏற்றுத் தொடர்ந்து வழிகாட்ட உள்ளார். டிம் குக்கிற்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக அதன் வன்பொருள் பொறியியல் பிரிவின் தலைவரான ஜான் டெர்னஸ் (John Ternus) வரும் செப்டம்பர் 1-ம் தேதி பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 வயதான ஜான் டெர்னஸ், ஆப்பிள் நிறுவனத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். ஐபோன், மேக் மற்றும் விஷன்…

Read More

சுமார் 114 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிக் கடலில் மூழ்கிய வரலாற்றுப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட அரிய பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட்டன. இதில், அந்த விபத்திலிருந்து உயிர் தப்பிய லாரா மேபல் ஃபிரான்காடெல்லி என்ற பெண்மணி அணிந்திருந்த ‘லைஃப் ஜாக்கெட்’, யாரும் எதிர்பாராத வகையில் சுமார் 8.2 கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. முதல் வகுப்பில் பயணித்த லாரா, கப்பல் மூழ்கத் தொடங்கியபோது இந்த ஜாக்கெட்டை அணிந்துகொண்டு உயிர்காப்புப் படகு மூலம் உயிர் தப்பியவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இந்தச் சுற்றுலா கப்பல் 1912-ல் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதில் 1,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய சில ஆதாரங்களில் ஒன்றாக இந்த ஜாக்கெட் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த அரிய பொருளை ஏலத்தில் எடுத்த ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், டைட்டானிக் குறித்த தேடலும் ஆர்வமும் இன்னும் மக்களிடையே குறையவில்லை என்பதற்கு இதுவே சாட்சி என மகிழ்ச்சி தெரிவித்தார். குறிப்பாக, இந்த லைஃப் ஜாக்கெட்டில் லாரா…

Read More

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் பிற மாவட்ட மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றச் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காகப் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதற்காகத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இன்று முதல் மூன்று நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காகக் கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து கூடுதல் சேவைகள் வழங்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, சென்னையில் இருந்து மட்டும் மொத்தம் 5,574 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 21) வழக்கமான சேவைகளுடன் கூடுதலாக 1,404 பேருந்துகளும், நாளை (ஏப்ரல் 22) 3,570 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், தேர்தல் நாளான நாளை மறுநாள் மதியம் ஒரு மணி வரை சுமார் 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்தப் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும்,…

Read More

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் இறுதிக்கட்டப் பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 21) நிறைவடையள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பொதுமக்களுக்கு  வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த காலங்களில் அதிமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களையும், தற்போதைய ஆட்சியின் குறைகளையும் சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தின் மேன்மைக்காகவும், ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் மக்கள் அனைவரும் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், பொய்ப் பிரச்சாரங்களை முறியடித்து, ஒரு நேர்மையான மற்றும் வலிமையான ஆட்சியை மீண்டும் மலரச் செய்ய மக்கள் தங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும் அந்த வீடியோ பதிவில் அவர் வலியுறுத்தியுள்ளார். https://x.com/KovaiSathyan/status/2046508198488867207? அந்தவகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப்ரல் 21) வெளியிட்ட வீடியோவில்,  “வாக்குரிமை என்பது நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வருகிற 23ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் நாம் அனைவரும்…

Read More

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த செங்கோட்டையன் தனது ஆதரவாளர்கள் முன் கண்ணீர் சிந்தி உருக்கமாக பேசியுள்ளார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், கோபிசெட்டிபாளையம் தொகுதி தற்பொழுது ஒட்டுமொத்த மாநிலத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீண்டகாலமாக அதிமுகவின் கோட்டையாகவும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் செல்வாக்கு மிக்க தொகுதியாகவும் விளங்கிய கோபியில், இந்த முறை அரசியல் காட்சிகள் முற்றிலும் மாறியுள்ளன. அதிமுகவில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், முதல்முறையாக ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுகிறார். பிரச்சாரத்தின் இறுதித் தருணத்தில் தனது ஆதரவாளர்களிடையே பேசிய அவர், விஜய் தனக்கு அளித்த நெகிழ்ச்சியான அறிவுரை குறித்துப் பேசும்போது மேடையிலேயே கண் கலங்கினார். பரப்புரையின் போது செங்கோட்டையன் கூறுகையில், தான் விஜய்யின் புகைப்படத்தைச் சட்டைப் பையில் வைத்திருந்தபோது, அதைத் தடுத்த விஜய், “நீங்கள் ஒரு மூத்த தலைவர், உங்கள் சட்டைப் பையில் என்றும் ஜெயலலிதாவின் புகைப்படம் இருப்பதே…

Read More

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக, ஆயுஷ் மத்ரே நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உறுதி செய்துள்ளது. அவர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய சுமார் 6 முதல் 12 வாரங்கள் தேவைப்படும். https://x.com/ChennaiIPL/status/2046515543780540719? வரும் ஏப்ரல் 23 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியப் போட்டிக்கு முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொடைத்தசைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, அந்த அணியின் இளம் பேட்ஸ்மேனான ஆயுஷ் மத்ரே, நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் சனிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அவருக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஃபார்மில் இருந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான மத்ரே, ஆறு போட்டிகளில்…

Read More

திமுக-வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி, இல்லத்தரசி திட்டத்துக்கான 8,000 ரூபாய் கூப்பன்களை வினியோகித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசி திட்டத்தின் கீழ் 8,000 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும் எனவும், அதில் விருப்பப்பட்ட வீட்டு உபயோக பொருட்களை மகளிர் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 8,000 ரூபாய்க்கான கூப்பன்களை திமுக வேட்பாளர்கள் சிலரும், கட்சியினரும் வாக்காளர்களுக்கு வினியோகித்து வருவதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், கோவை தெற்கு , பர்கூர், பாலக்கோடு, கும்பகோணம் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பல தொகுதிகளில், முதல்வர் புகைப்படம், வரிசை எண்ணுடன் இந்த கூப்பன்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. போட்டியிடும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த கூப்பன்களை வழங்க முடியும் எனவும், ஆட்சிக்கு வரும்…

Read More

ஈரானின் கடற்படை “முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது” என்றும், அதன் விமானப்படைத் திறன்கள் கடுமையாகப் பலவீனமடைந்துவிட்டன என்றும் டிரம்ப் கூறியுள்ளார். ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப்,. கடந்த 2025 ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் ஈரானின் அணு ஆயுதக் கனவு தகர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், நிலத்தடி அணுசக்தி மையங்கள் உட்பட முக்கிய உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துவிட்டதாக அவர் தனது பதிவில் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இரண்டு வார கால போர் நிறுத்தம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், நிலைமை பதற்றமாகவே உள்ளது. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுவதற்கு “மிகவும் வாய்ப்பில்லை” என டிரம்ப் குறிப்பிட்டார். அதே சமயம், இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் ஈரான் கலந்துகொள்ளுமா என்பது…

Read More

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரத் தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வலிமையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. “மனிதநேயத்தின் எல்லைகள் மீறப்படும்போது, அதற்கான எதிர்வினை மிகவும் தீர்க்கமானதாகவும் அதிரடியாகவும் இருக்கும்” என ராணுவம் அதில் எச்சரித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் சமரசமற்றது என்பதை இந்தப் பதிவு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. https://x.com/adgpi/status/2046400596132159685? கடந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அந்தத் துயரச் சம்பவத்தின் ஓராண்டு நினைவையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதே வேளையில், அநீதி இழைத்தவர்கள் தண்டிக்கப்பட்டு ‘நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது’ என்பதையும் ராணுவம் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது. நீதி வழங்கப்படும். இந்தியா ஒன்றுபட்டு நிற்கிறது.” அந்தப்…

Read More