Author: Editor web3
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே 15 வயது சிறுமி 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமி, ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்திருந்த நிலையில், இந்த கொடூர தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் முக்கியத் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பான சூழல் என நம்பி வந்த இடத்தில் சிறுமிக்கு நேர்ந்த இந்தத் துயரம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…
தமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக வேட்பாளர்களின் அனல் பறந்த பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பெரம்பலூர் தொகுதியில் திமுக நிர்வாகியின் காரிலிருந்து ரூ.2.44 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெயராமன் என்பவரது காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டபோது, கணக்கில் வராத இந்தப் பணம் கண்டறியப்பட்டது. பணத்துடன் சேர்த்து வாக்காளர் பூத் சிலிப்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், இது வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த பணம் என்பது உறுதியாகியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, பெரம்பலூர் தொகுதியில் பணபலம் தேர்தல் நேர்மையைப் பாதிக்கும் எனக் கூறி, அங்கு தேர்தலை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணத்தின் பின்னணி குறித்து தேர்தல் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி…
திராவிட மாடல் ஆட்சியில் மீனவர்களுக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக திமுக சார்பில் சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை கைப்பற்றி சேதமடைந்த 180 விசைப்படகுகளுக்கும், 25 நாட்டுப்படகுகளுக்கும் ரூ.12.76 கோடி நிவாரணம் முதல்வர் வழங்கியுள்ளார். மீன் பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர் குடும்பத்திற்கு தினமும் வழங்கப்படும் இழப்பீடு ரூ.250-ஐ ரூ.500 என உயர்த்தியுள்ளார். மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5,000 என்பதை ரூ.8,000 ஆக உயர்த்தியுள்ளார். இதனால் 8,76,032 மீனவ குடும்பங்கள் பயன் அடைவார்கள். மீன்பிடி குறைவு கால நிவாரணம் ரூ.5,000 என்பதை ரூ.6,000 ஆக உயர்த்தியுள்ளார். இதனால் 9,13,394 மீனவ குடும்பங்கள் பயனடைவார்கள். கடல் மீனவர் சேமிப்பு திட்டத்தின் கீழ் ரூ.304.61 கோடி நிவாரணம், இதனால் 10,17,226 மீனவர்கள் பயனடைவர். கடல் மீனவ மகளிர் சேமிப்பு திட்டத்தில் ரூ.301.02 கோடி நிவாரணம். இதனால் 10,05,390 மீனவ மகளிர் பயன்பெறுவர். கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்…
இரு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறைத்து காட்டியது முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில், த.வெ.க. தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் செல்வப்பெருந்தகை நாடகமாடினார் என அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி ஆங்கில உரையைத் தமிழில் மொழிபெயர்த்த தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல்காந்தி பேசியதற்கு சற்றும் தொடர்பில்லாமல், தன் மனதில் தோன்றியதை எல்லாம் அடித்து விட்ட உண்மை, இன்று தான் ராகுல் காந்திக்குத் தெரிந்திருக்கிறது போலும். செல்வப்பெருந்தகையை இனிமேல் எனது கூட்டத்தின் பக்கமே விடாதீர்கள் என்று உத்தரவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. ராகுல் காந்தியின் இன்றைய கூட்டத்திற்கு தனக்கு அழைப்பில்லை என்ற உண்மை வெளிவந்தால், இன்னும் அசிங்கமாகிவிடும் என்ற பதட்டத்தில், செல்வப்பெருந்தகை, இன்று காலை, தனது வீட்டில் வருமானவரி சோதனை நடப்பதாகவும், தன்னை வீட்டிற்குள்ளேயே சிறைப்பிடித்து வைத்திருப்பதாகவும் ஒரு நாடகமாடினார். இதனை அடுத்து, வழக்கம்போல, சினிமா வசனங்கள்…
“ஊழல்” காரணமாக அதிமுக தலைமை பாஜகவிடம் “சரணடைந்துவிட்டது” என்றும், தற்போது அந்த பிராந்திய கட்சி தமிழகத்திற்குள் பாஜக நுழைவதற்கான ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். கன்னியாகுமரியில் நடந்த தேர்தல் பேரணியில் உரையாற்றிய காந்தி, “திராவிட சித்தாந்தத்தை வெறுக்கும் ஆர்.எஸ்.எஸ், தமிழ்நாட்டையும் ஆளத் திட்டமிடுகிறது” என்று கூறினார். ஒவ்வொரு மாநிலமும் தனது குரலையும் சுயாட்சியையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். “ஒவ்வொரு மாநில மக்களும் தங்கள் மாநிலத்தை நடத்த வேண்டும். ஆனால் பாஜக இப்படிச் சிந்திப்பதில்லை. ஒரே பாரம்பரியம், ஒரே மொழி, ஒரே வரலாறு என்பதே அதன் நம்பிக்கை,” என்று விமர்சித்துள்ளார். பரவலாக்கப்பட்ட ஆட்சிமுறைக் கொள்கைகளுக்கு இணங்க, தமிழ்நாடு அதன் சொந்த மக்களால் ஆளப்பட வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செல்வாக்கு செலுத்த முயன்றதாகவும், அதற்குப் பதிலடியாக…
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு இவாட்டே மாகாணத்தில் பசிபிக் கடல் பரப்பில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவாகியுள்ளது. இதன் தாக்கம் 100 கி.மீ. வரை இருந்ததால், டோக்கியோவிலும் பல உயரமான கட்டடங்கள் குலுங்கியுள்ளன. இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மாலை 4:53 மணிக்கு வடக்கு இவாத்தே மாகாணத்திற்கு அப்பால் உள்ள பசிபிக் கடற்பகுதியில் ஏற்பட்டது. இதன் அதிர்வு, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோக்கியோ வரையிலான பெரிய கட்டிடங்களை உலுக்கும் அளவுக்கு வலுவாக இருந்தது. சுனாமி அலைகள் மீண்டும் மீண்டும் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச்சரிக்கை நீக்கப்படும் வரை பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியேற வேண்டாம்,” என்று அது கூறியது. பசிபிக் ‘நெருப்பு வளையத்தின்’ மேற்கு விளிம்பில் உள்ள நான்கு முக்கிய புவித்தட்டுக்களின் மீது அமைந்துள்ள ஜப்பான், உலகின் மிகவும் நில அதிர்வு…
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஸ்ரீவ்போர்ட் பகுதியில் அரங்கேறியுள்ள கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்த இந்த வன்முறையில், 14 வயதிற்கு உட்பட்ட 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் சொந்தப் பிள்ளைகள் என்பதுதான் உச்சக்கட்ட சோகம். முதலில் ஒரு பெண்ணைத் தாக்கிய அந்த நபர், பின்னர் அடுத்தடுத்து இரண்டு வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த குழந்தைகளை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ஒரு வயதுக் குழந்தை முதல் 12 வயது சிறுவர்கள் வரை ரத்த வெள்ளத்தில் பலியாகினர். ஒரு சிறுவன் தப்பிக்க முயன்று வீட்டின் கூரை மீது ஏறியபோது சுடப்பட்டு அங்கேயே சடலமாக மீட்கப்பட்ட காட்சி மீட்புப் பணியினரையே கண்கலங்கச் செய்துள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 31 வயதான ஷமார் எல்கின்ஸ் என்பவரைப் பிடிக்கக் காவல்துறையினர் முயன்றபோது, இருதரப்பிற்கும் இடையே…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் கட்சியான திமுகவின் பிரசார யுக்திகள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்துக் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. “ஜனநாயகத்தை காப்போம்” என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக, நடைமுறையில் வாரிசு அரசியலையே முதன்மைப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் மற்றும் அவர் துணை முதலமைச்சராகத் தரம் உயர்த்தப்பட்டது போன்றவை, கட்சியில் பல தசாப்தங்களாக உழைத்த மூத்த நிர்வாகிகளைப் புறக்கணிக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது. இது கட்சியின் அடிப்படை ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். அரசின் நிர்வாக ரீதியான முடிவுகளில் உதயநிதி ஸ்டாலினின் தலையீடு அதிகரித்திருப்பது, அரசு இயந்திரத்தில் ஒருவிதத் தேக்கநிலையை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த அமைச்சர்களின் ஆலோசனைகளைத் தாண்டி, உதயநிதியின் விருப்பங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவது, அதிகாரப் பரவலாக்கத்திற்கு முரணானது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. தேர்தல் அறிக்கை தயாரிப்பு முதல் முக்கியக் கொள்கை முடிவுகள் வரை அனைத்திலும் அவரது…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் சூறாவளிப் பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் நிறைவடைகின்றன. இதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாக்காளர்களைக் கவரத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய அளவில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மற்றும் சென்னையின் முக்கியப் பகுதிகளான வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தனது பரப்புரைப் பயணத்தைத் திட்டமிட்டிருந்த விஜய், இன்று பனையூர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கும்மிடிப்பூண்டி தொகுதியில் தனது ரோடு ஷோவை தொடங்கினார். திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களிடையே வாக்குச்…