Author: Editor web3
சாமானிய மக்களைப் போன்று அரசியல் தலைவர்களும் காலை முதலே தேர்தல் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், காரைக்குடி வாக்குச்சாவடியில் முதல் ஆளாக ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் ஜனநாயகக் கடமையாற்றினர். திருத்துறைப்பூண்டியில் CPI முத்தரசன் தனது வாக்கினை செலுத்தினார். அதேபோல், திருச்சியில் வரிசையில் நின்று அமைச்சர் KN நேரு உள்ளிட்டோர் ஓட்டுப் போட்டனர். இதேபோல் ஸ்ரீபெரம்புதூர் தொகுதியில் தனது வாக்கினை குடும்பத்துடன் பதிவு செய்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. சென்னை மதுரவாயல் தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக். நாமக்கல் மாவட்டம் கோவிந்தம் பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய குமாரபாளையம் சட்டமன்ற வேட்பாளர் ஆன தங்கமணி வாக்கினை செலுத்தினார்.. சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது தொகுதியில் வாக்கினை செலுத்தினார். சென்னை ஓட்டேரியில் உள்ள வாக்கு மையத்தில் இந்து…
திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிடும் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பிலோமினாள்புரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள தூய பிலோமினாள் பள்ளி வாக்குச்சாவடி எண் 85-ல் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உடைந்தது. இந்த விபத்தினால் இயந்திரம் பழுதடைந்து செயலிழந்ததை அடுத்து, அந்த மையத்தில் வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது. இயந்திரம் பழுதான செய்தி பரவியதால், நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் அதிருப்தி அடைந்தனர். மாற்று இயந்திரம் கொண்டு வர தாமதமானதால், பொதுமக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு சற்று பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர், புதிய இயந்திரத்தை பொருத்தி வாக்குப்பதிவை மீண்டும் தொடங்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அமைச்சர் போட்டியிடும் தொகுதி என்பதால் கூடுதல் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்களிக்கும் செயல்முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த விவிபேட் (VVPAT) கருவி மிக முக்கியப் பங்காற்றுகிறது. நீங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உங்களுக்குப் பிடித்த வேட்பாளரின் சின்னத்திற்கு நேராக உள்ள பொத்தானை அழுத்தியவுடன், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள விவிபேட் இயந்திரத்தின் கண்ணாடித் திரையில் ஒரு சிறிய காகிதச் சீட்டு தோன்றும். அந்தச் சீட்டில் நீங்கள் வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், பெயர் மற்றும் சின்னம் ஆகியவை அச்சிடப்பட்டிருக்கும். இந்தச் சீட்டு சுமார் 7 விநாடிகள் வரை உங்கள் பார்வைக்குத் தெரியும், அதன் பிறகு அது தானாகவே அறுந்து இயந்திரத்தின் உள்ளே இருக்கும் பெட்டியில் விழுந்துவிடும். இயந்திரத்தில் பொத்தானை அழுத்திய பிறகு ‘பீப்’ சத்தம் வருவதை மட்டும் கவனிக்காமல், விவிபேட் திரையில் தோன்றும் சீட்டில் உள்ள விவரங்கள் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவருடன் ஒத்துப்போகிறதா என்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம். அந்த 7 விநாடிகளுக்குள் விவரங்களைச் சரிபார்ப்பதன் மூலம் உங்கள் வாக்கு சரியான முறையில் பதிவாகியுள்ளது…
தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் தங்களது ஜனநாயக கடமையை பதிவு செய்து வருகின்றனர், 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், 75,064 வாக்குச்சாவடிகளில் 5,73,43,291 பேர் வாக்களிக்க உள்ளனர். பூத் ஸ்லிப் மற்றும் அடையாள அட்டை அவசியம் எடுத்துச் செல்லவும். வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லக்கூடாது. வாக்களிப்பதை போட்டோவோ, வீடியோவோ எடுக்கக் கூடாது. வெயில் காரணமாக குடை, தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லவும். முன்னதாக, TN முழுவதும் உள்ள 75,064 வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது. வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ரேண்டம் முறையில் 10 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு EVM இயந்திரம் முறையாக வேலை செய்கிறதா என்ற சோதனையானது நடைபெற்றது. பின்னர், அந்த வாக்குகள் அழிக்கப்பட்டு மக்கள் வாக்களிக்க EVM தயார் செய்யப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள்: தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வாக்குப்பதிவு வரலாற்றை…
செங்குன்றம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தனது பிரசார வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை நெருங்கி புகைப்படம் எடுக்க முயன்ற அந்த ஆட்டோ ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக வாகனத்தின் முன் தவறி விழுந்தார். இந்த விபத்தில் அவரது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த ஆட்டோ ஓட்டுநர், நடிகர் விஜய்க்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஓட்டுநர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுநர். என் குடும்பமே என் வருமானத்தை நம்பித்தான் இருக்கிறது. இப்போது கால் முறிந்த நிலையில் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.” “உங்களைப் பார்க்க வந்த இடத்தில் எனக்கு இந்த…
ஐபிஎல் திருவிழாவின் மிக முக்கியமான ஆட்டமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதல் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருப்பவர் ‘தல’ எம்.எஸ். தோனி. சமீபத்தில் காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வலைப்பயிற்சியின் போது தோனி தனது பழைய பாணியில் சிக்ஸர்களை மைதானத்தின் நாலாபுறமும் பறக்கவிடும் வீடியோவை ஐபிஎல் நிர்வாகம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “சிங்கம் தனது வேட்டைக்குத் தயாராகிவிட்டது” என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களை அதிரவைத்து வருகின்றனர். குறிப்பாக தோனியின் டிரேட்மார்க் ஷாட்டான ‘ஹெலிகாப்டர் ஷாட்’ நாளை வான்கடே மைதானத்தில் மீண்டும் அரங்கேறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வான்கடே மைதானம் தோனிக்கு மிகவும் ராசியான மைதானம் என்பதால், நாளை மும்பைக்கு எதிராக அவர்…
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மற்றும் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இணையும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தின் தொடக்க விழா மற்றும் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. ‘வாரிசு’ திரைப்படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி இப்படத்தை இயக்குகிறார், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படம், பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. https://x.com/SVC_official/status/2046870612963127692? ஷாரூக் கானின் ‘ஜவான்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு நயன்தாரா நடிக்கும் இரண்டாவது நேரடி பாலிவுட் படம் இதுவாகும். சமீபத்தில் நடிகர் மாதவனுடன் ‘டெஸ்ட்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நயன்தாரா, தற்போது சல்மான் கானுடன் ஜோடி சேருவதன் மூலம் மீண்டும் பாலிவுட்டில் தனது முத்திரையை பதிக்கத் தயாராகிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ள நிலையில், நயன் – சல்மான் கூட்டணியின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரியைக் காண ரசிகர்கள்…
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை கண்காணிக்க கூடுதல் CCTV அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதிமுக புதிய மனு அளித்துள்ளது. தமிழகத்தில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மாநிலம் முழுவதும் 75,032 வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. இந்த நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக சார்பில் எம்பி இன்பதுரை அவசர மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சில மாவட்டங்களில் CCTV எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுதல் உள்ளிட்ட தவறுகளை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேவையான சிசிடிவிகள் பொருத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பகல்காமில் நடந்த அந்த கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால், லெப்டினன்ட் வினய் நர்வாலின் குடும்பத்திற்கு மட்டும் காலம் அப்படியே உறைந்து நிற்கிறது. கனவுகள் பல சுமந்து, நாட்டுக்காகச் சேவையாற்றத் துடித்த ஒரு இளம் கடற்படை அதிகாரி, தனது தேனிலவின் போது காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட அந்தத் துயரம் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது. கடந்த 2025 ஏப்ரல் 22-ம் தேதி, தனது 26-வது வயதில் வினய் நர்வால் வீரமரணமடைந்தார். ஏப்ரல் 16-ம் தேதி தான் அவருக்குத் திருமணம் நடந்திருந்தது. திருமண வரவேற்பு முடிந்த மூன்றே நாட்களில், புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியவர், பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானார். அந்தச் செய்தியைக் கேட்ட அன்றே எங்கள் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. இப்போது ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அவ்வளவுதான்” என அவரது தந்தை ராஜேஷ் நர்வால் வேதனையுடன் கூறுகிறார். வினய் நர்வால் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தனது இலட்சியங்கள்…
கோவை சூலூர் தொகுதி திமுக வேட்பாளருக்காக கரூர் கும்பல் வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதைக் கண்டித்து, கொச்சி-சேலம் நெடுஞ்சாலையில் தவெகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல்களின்படி, திமுக வேட்பாளர் தளபதி முருகேசன் சார்பாகப் பணம் விநியோகிக்கப்படுவதாகக் கூறி, பட்டணம்புதூரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு தவெக தொண்டர்கள் கூடினர். தவெக-வின் சூலூர் வேட்பாளர் என்.எம். சுகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.2,000 வழங்கப்பட்டது குறித்த தங்களின் புகாரின் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகத் தொண்டர்கள் குற்றம் சாட்டினர். தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தபோது, பணத்தை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு கார் வழிமறிக்கப்பட்டது. அப்போது, ஓட்டுநர் தப்பிப்பதற்காக வாகனத்தை திடீரெனப் பின்னோக்கி இயக்கினார். அப்போது, கார் ஒன்று காலில் ஏறியதில் தவெக தொண்டர் ஒருவர் காயமடைந்தார். இது தி.மு.க மற்றும் தவெக தொண்டர்களிடையே மோதலுக்கு வழிவகுத்தது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு,…