Author: Editor web3
ஈரோட்டில் வரும் 18ம் தேதி தவெக மாநாடு நடத்த தடை ஏதும் இல்லை என்றும் திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை பகுதியில் வருகின்ற 18ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை தவெகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ செங்கோட்டையன், நேரில் இருந்து தேவையான பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வரும் 18ஆம் தேதி விஜயமங்கலத்தில் காலை 11 மணி முதல் 1 மணிக்குள் நடைபெற உள்ள தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம். எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு அலுவலர்கள் செய்து தர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவர்கள் எங்களுக்கு கூறி வரும் ஆலோசனைகளை ஏற்று பொதுக்கூட்டத்திற்கான பணிகளை செய்து வருகிறோம்.…
4வது ஆண்டை நெருங்கி வரும் ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மேலும் தொடர்ந்தால் அது ஒரு 3ம் உலகப் போராக மாறக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா-உக்ரைன் இடையே தீவிர போர் தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளை கடந்து 4வது ஆண்டும் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர, திருத்தப்பட்ட 19 அம்சங்கள் அடங்கிய அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவரும் நிலையில், அமைதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் சில பகுதிகள் தங்களுக்கு எதிராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்து வருகிறார். பேச்சுவார்த்தைக்கு தடங்கள் ஏற்படுத்துவதாக ஜெலன்ஸ்கி மீது விரக்தியில் உள்ள டிரம்ப், தற்போது பெரிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இந்த போரின் தற்போதைய போக்கு, உலகை ஒரு பேரழிவு தரும் உலகளாவிய மோதலை நோக்கித்…
கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து , தற்போது தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.எம்.எம். நசீர் உதீன் , வியாழக்கிழமை ( டிசம்பர் 11) 13வது தேசிய சட்டமன்றத் தேர்தல் பிப்ரவரி 12 , 2026 அன்று நடைபெறும் என்று அறிவித்தார் . இது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் அரசாங்கத்தின் நீட்டிப்பு குறித்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களைத் தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 2024 இல் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதிலிருந்து நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் ,பங்கேற்க முடியாது . அவாமி லீக் வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ளது . இதன் விளைவாக , முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் கட்சியான பிஎன்பிக்கும் , அடிப்படைவாத ஜமாத் – இ – வங்கதேசத்திற்கும் இடையே முக்கியப் போட்டி இருக்கும் என்று…
2026ம் ஆண்டுக்கான T20 உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. டிக்கெட் விலை இந்தியாவில் ரூ.100 மற்றும் இலங்கையில் ரூ.300 இல் தொடங்குகிறது. டிக்கெட்டுகளை எப்படி, எங்கு முன்பதிவு செய்வது என்பது குறித்து அறிந்துகொள்ளுங்கள். ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் 10வது பதிப்பு (டி20 உலகக் கோப்பை 2026) பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கும். இது ஒரு குழு நிலை, ஒரு சூப்பர் 8 நிலை மற்றும் ஒரு நாக் அவுட் நிலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மொத்தம் 55 போட்டிகள் 20 அணிகளுக்கு இடையே நடைபெறும். போட்டியை இந்தியாவும் இலங்கையும் நடத்தும், அதே நேரத்தில் பாகிஸ்தான் தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடும். இந்தியாவில் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ரூ.100 இல் தொடங்குகின்றன, அதே நேரத்தில் இலங்கையில் போட்டிகளுக்கான மலிவான டிக்கெட் சுமார் ரூ.300 ஆகும். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு அறிக்கையில், “ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கான…
பேருந்து படிகட்டுகளில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்தால், ஓட்டுநர், நடத்துனர்கள்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று ஏஐடியுசி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாணவர்கள் சாகசம் செய்வதாக நினைத்து அரசு பேருந்துகளின் படியில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். ஓட்டுநர், நடத்துனர் கண்டித்தால் அவர்களை தாக்குகின்றனர். ஓட்டுநர் சாலையை கவனித்து பேருந்து ஓட்டுவதில் கவனம் செலுத்துவார். நடத்துனர் பயணிகளுக்கு குறிப்பிட்ட கட்டண நிலைக்குள் பயணச்சீட்டு வழங்கி அவரது பணியில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. படிக்கட்டில் பயணம் செய்வது சட்டவிரோதம் என தெரிந்தும் வேண்டுமென்றே பயணம் செய்வோரை தடுப்பதற்காகத்தான் படிக்கட்டு கதவுகள் உள்ளன. அனைத்து பேருந்துகளிலும் இந்த வசதியை ஏற்படுத்திட வேண்டும். ஓட்டுநர், நடத்துனர் மட்டுமே படிக்கட்டு பயணத்திற்கு பொறுப்பு என்ற போக்குவரத்து துறையின் அறிவிப்பு கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மண்ணில் பிரசவம் பார்த்து குடியுரிமை பெற விரும்பும் எந்தவொரு விண்ணப்பதாரருக்கும் சுற்றுலா விசா வழங்கப்படாது என்று இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரசவம் பார்ப்பதற்காக சுற்றுலா விசா பெறுபவர்கள் இப்போது கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இதுபோன்ற முயற்சிகள் அமெரிக்க விசா முறையை தவறாகப் பயன்படுத்துவதாகக் கருதப்படும் என்றும், விண்ணப்பம் முற்றிலும் நிராகரிக்கப்படும் என்றும் தூதரகம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் பதிவில், அமெரிக்காவுக்குப் பயணம் செய்வதன் முதன்மை நோக்கம் குழந்தையைப் பெற்றெடுத்து, அக்குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவது என்றால், அத்தகைய கர்ப்பிணிப் பெண்களுக்குத் தூதரக அதிகாரிகள் விசா வழங்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, “பயணத்தின் முதன்மை நோக்கம் அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுத்து, அக்குழந்தைக்கு அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவது என்று அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் நம்பினால், அவர்கள் சுற்றுலா விசா விண்ணப்பங்களை நிராகரிப்பார்கள். இது அனுமதிக்கப்படாது என்று தெளிவுப்படுத்தியுள்ளது. அமெரிக்க செனட்டின் உள்நாட்டுப்…
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 15ம் தேதி தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்காக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்த, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். அதன் ஒருபகுதியாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தீவிரம் காட்டி வருகிறார். இந்தநிலையில், வருகின்ற 15ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பாக சென்னை மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், கூட்டணி விரிவாக்கம் தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பாமகவில் நிலவும் தந்தை – மகன்…
ஜப்பானின் வடக்கு பகுதியில் இன்று 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலநடுக்கம் ஹொன்ஷுவில் உள்ள இவாட் மாகாணத்தில் உள்ள குஜி நகரத்திலிருந்து 130 கிலோமீட்டர் அல்லது 81 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. எச்சரிக்கை விடுக்கப்பட்ட வடக்கு பசிபிக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 3 அடி வரை அலைகள் எழக்கூடும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தை விட இந்த நிலநடுக்கம் பலவீனமாக இருந்ததாக தெரிவித்த ஜப்பானின் NHK, இந்த நிலநடுக்கத்தால் அலமாரிகளில் இருந்து பொருட்கள் விழுந்து, சாலைகள் சேதமடைந்து, ஜன்னல்கள் உடைந்து, 70 சென்டிமீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பசிபிக் “நெருப்பு வளையத்தின்” மேற்குப் பகுதியில் நான்கு…
சர்வதேச பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணகளால் முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.12) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் நேற்று (டிச.11) ரூ.96,400க்கு விற்பனையான நிலையில், இன்றும் ரூ.1,600 உயர்ந்து ரூ.98,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,250க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.160 மட்டுமே உயர்ந்த நிலையில், இன்று ரூ.1,600 உயர்ந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6000 உயர்ந்து ரூ.215 ஆகவும் ஒரு கிலோ ரூ,2,15,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்திற்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த முறை திமுக, அதிமுக, தவெக, என பல முனை போட்டிகள் நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதேபோல், தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது, வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு என பல்வேறு பணிகளை தொடங்கிவிட்டது. இந்தநிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தவெக போட்டியிடவுள்ளது. தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகார பெறவில்லை. இருப்பினும், மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதனை தொடர்ந்து, தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அக்கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது. இதுதவிர, விசில், ஆட்டோரிக்ஷா…