Author: Editor web3
இப்போதெல்லாம் ஏராளமான ஸ்மார்ட்போன் விருப்பங்கள் இருப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது கடினம். எனவே, அதன் அம்சங்கள் மற்றும் தேவைகளின் அடிப்படையில் மொபைல் தேர்வு செய்யலாம். நீங்கள் ஒரு தொலைபேசியை வாங்க சந்தை அல்லது மின் வணிக தளத்திற்குச் சென்றால், குழப்பமடைவது இயல்பானதுதான், ஒவ்வொரு மாதமும் புதிய தொலைபேசிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, இதனால் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட தொலைபேசியைத் தேர்ந்தெடுப்பது கடினமாகிறது. எனவே, உங்கள் தேவைகள் மற்றும் அம்சங்களைக் கருத்தில் கொண்டால் சரியான தொலைபேசியைத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருக்கும். இன்று, ஒரு புதிய தொலைபேசியை வாங்குவதற்கு முன் நீங்கள் எந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்வோம். வீடியோ எடிட்டிங், கேமிங் போன்ற உயர்நிலை பணிகள் செய்ய வேண்டியிருந்தால், அதிக ரேம் உள்ள போனைத் தேர்வுசெய்யவும். அதிக ரேம் என்றால், ஒரே நேரத்தில் பல செயலிகள் திறந்திருந்தாலும் போன் சீராக இயங்கும், எளிமையாகச் சொன்னால், அது ஹேங் ஆகாது. செயலி: ஒரு…
ஜப்பானில் மக்கள் ஏன் ஒருவரையொருவர் வணங்கி வரவேற்கிறார்கள்?. இந்த பாரம்பரியம் எங்கிருந்து தோன்றியது?.
நீங்கள் ஜப்பானுக்குச் செல்ல திட்டமிட்டால், நீங்கள் கவனிக்கும் முதல் விஷயங்களில் ஒன்று, அங்குள்ள மக்கள் சந்திக்கும் போது கைகுலுக்குவதில்லை. மாறாக, அவர்கள் ஒருவரையொருவர் வணங்கி வாழ்த்துகின்றனர். இந்த நடைமுறை மிகவும் இயல்பானது மற்றும் ஜப்பானிய கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது, இது ஒரு வார்த்தை கூட பேசாமலேயே புரிந்துகொள்ளத்தக்கது. கும்பிடுவது ஓஜிகி என்று அழைக்கப்படுகிறது. இந்த பாரம்பரியம் எங்கிருந்து தோன்றியது என்பதை அறிந்துகொள்வோம். ஜப்பானிய சமஸ்கிருதத்தில், தலை குனிவது பணிவைக் குறிக்கிறது. தலை உடலின் மிக முக்கியமான மற்றும் புனிதமான பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, குனிவது மரியாதையைக் குறிக்கிறது மற்றும் மற்றொரு நபருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்திக் கொள்கிறது. ஒரு சக ஊழியரை வாழ்த்துவதாக இருந்தாலும் சரி அல்லது ஒரு நண்பருக்கு நன்றி தெரிவிப்பதாக இருந்தாலும் சரி, குனிவது பணிவின் அடையாளம். ஜப்பானின் கலாச்சார அமைப்பு சமூக நல்லிணக்கத்திற்கு அதிக மதிப்பை அளிக்கிறது. எனவே, கும்பிடுவது இந்த மனநிலையுடன் சரியாக ஒத்துப்போகிறது. மேலும்,…
விமானத் துறையில் இரண்டு நிறுவனங்களால் மட்டும் போட்டியிடும் நிலை நீடிக்கும் வரை விமானக் கட்டண உச்சவரம்பு அமலில் இருக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இண்டிகோவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட இடையூறுகள் கடந்த சில நாட்களில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் தாமதங்களுக்கு வழிவகுத்தன, இதனால் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பயணிகள் சிரமப்பட்டனர். இது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை பாதிப்பு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “இந்தியா போன்ற வளரும் நாடுகளில், ஒரு துறை ஒரு நிறுவனத்தால் அல்லது இரண்டு நிறுவனங்களால் மட்டுமே ஏகபோக ஆதிக்கம் செலுத்தப்படுவது ஏற்புடையதல்ல. நாட்டில் போட்டி இல்லாவிட்டால், நாம் தற்போது விமான துறையில் காணும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று தெரிவித்துள்ளது. ஒரு காலத்தில் துடிப்பாக…
பணி நேரத்திற்கு பிறகு அல்லது விடுமுறை நாட்களில், தனியார் நிறுவனங்கள் வேலை தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் போன் கால் அழைத்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது குறித்த தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே இந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில், இந்த மசோதா வாக்கெடுப்புக்கு அனுப்பப்படும் என்றும், அதன் பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு நாட்களிலும், பணி நேரம் முடிந்த பின்னரும் அலுவலக மேல் அதிகாரிகளிடமிருந்து மின்னஞ்சல் வந்து அந்த பணியை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த “Right to Disconnect Bill” (தொடர்பைத் துண்டிக்கும் உரிமை மசோதா) என்பது, பணியாளர்கள் அலுவலக நேரத்திற்குப் பிறகு வேலை தொடர்பான…
அமெரிக்கா இனி ரஷ்யாவை நேரடி அச்சுறுத்தலாகக் கருதாது என்றும் அதற்கு பதிலாக அதனுடன் ஒத்துழைக்கும் என்றும் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில் திருத்தம் செய்துள்ளது. 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை இணைத்து 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது படையெடுத்ததிலிருந்து அமெரிக்கா ரஷ்யாவை ஒரு பெரிய அச்சுறுத்தலாக தொடர்ந்து பார்த்து வருகிறது. இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் அதன் புதிய தேசிய பாதுகாப்பு உத்தியில் முக்கிய திருத்தத்தை செய்துள்ளது. புதிய கொள்கையின் கீழ், அமெரிக்கா இனி ரஷ்யாவை நேரடி அச்சுறுத்தலாகக் கருதாது, அதற்கு பதிலாக அதனுடன் ஒத்துழைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையில் , ரஷ்யா அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வரவேற்றது, இது ஒரு நேர்மறையான முயற்சி என்று கூறியது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது,”நாம் காணும் மாற்றங்கள் பல வழிகளில் நமது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளன” என்று கூறினார். ரஷ்ய அதிபர் புதினிடம் அதிபர் டிரம்ப் கருணை காட்டுவது…
ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் அமைந்துள்ள சாலைக்கு ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ என்று பெயரிடப்படும் என தெலுங்கானா அரசு முடிவெடுத்துள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்தநிலையில், ஹைதராபாத்தில் உள்ள பல சாலைகளை உலகத் தலைவர்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அர்ப்பணிக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒருபகுதியாக, நேரு வெளிவட்டச் சாலையை ரேடியல் ரிங் சாலையுடன் இணைக்கும் 100 மீட்டர் நீளமுள்ள புதிய பசுமைச் சாலைக்கு ரத்தன் டாடாவின் பெயர் சூட்டப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தச் சாலையில் உள்ள சந்திப்பு ஏற்கனவே டாடா சந்திப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது. மற்றொரு சுவாரஸ்யமான அறிவிப்பில், அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள தெருவிற்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ என்று பெயரிடப்பட உள்ளது. உலகில் ஒரு சாலைக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயர் சூட்டப்படுவது இதுவே முதல் முறை. இந்த திட்டம் குறித்து மாநில…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற உண்டியல் மோசடி விவகாரத்தில் தேவஸ்தான முன்னாள் ஊழியர் ஒருவர், தானே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணத்தை எண்ணும் இடம் ‘பரகாமணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த துறையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தவர் ரவிக்குமார். இவர் தேவஸ்தானத்தின் முன்னாள் ஊழியர் ஆவார். இவர் தனது பணிக்காலத்தில் சிறுக சிறுக உண்டியல் பணத்தை கையாடல் செய்து, சுமார் 100 கோடி ரூபாய் வரை திருடியதாக புகார்கள் எழுந்தன. பலத்த பாதுகாப்பு நிறைந்த கோவிலுக்குள் இவ்வளவு பெரிய தொகை எப்படி திருடப்பட்டிருக்கும் என்பது குறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையின் பிடியில் சிக்கிய ரவிக்குமார், தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கண்ணீர் மல்க பேசியுள்ள அவர், தன் மீதான குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.…
தனது திருமணம் நின்றுவிட்டதாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா அறிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இருந்து வருகிறார். இடதுகை பேட்டரான இவர் பல்வேறு கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் இந்திய அணி வென்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கிய பங்கு வகித்தார். அத்துடன் மகளிர் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவரும் பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். கடந்த சில வாரங்களாக இருவரும் தங்களது காதலை வெளிப்படுத்தி வந்த நிலையில் நவம்பர் 23 ம்தேதி இருவரது திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் உள்ள ஸ்மிருதி மந்தனா குடும்பத்தினருக்கு சொந்தமான…
தவெக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைவார்கள் என கூறப்பட்ட நிலையில், செங்கோட்டையன் சூசகமாக பதிலளித்திருந்தார். விஜய்க்கு வழிகாட்டியாக இருந்து வெற்றிக்கு உதவுவேன் என கூறிய செங்கோட்டையன், இதற்கு அனைவரும் ஒன்றுதிரண்டு ஆதரவளிக்க வேண்டும் என டிடிவி, ஓபிஎஸ்க்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த பதிலால் டிடிவி, ஓபிஎஸ் உடன் அவர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது மறைமுகமாக உறுதியாகியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவந்தனர். இந்தநிலையில், கூட்டணி குறித்து அமமுக இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெளிவுபடுத்தினார். வரவிருக்கும் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்துடன் அமமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்தார். கூட்டணி குறித்து அமமுக இன்னும் எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார். இருப்பினும், கூட்டணியை தலைமையேற்று நடத்துகிற சில கட்சிகள் தங்கள் கட்சியை அணுகி பேசி வருவதாகவும், முடிவெடுக்க…
அமெரிக்க பாப் நட்சத்திரம் கேட்டி பெர்ரி மற்றும் கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் தங்கள் உறவை இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கனடா நாட்டின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரை தமிழர்கள் எளிதில் மறக்க முடியாது. கனடாவில் வசித்து வரும் தமிழர்களுடன் ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் என தமிழர் பண்டிகையை மறக்காமல் கொண்டாடி ட்ரெண்டிங்கில் இடம்பிடிப்பார். இப்படி தமிழர்களுடன் நெருக்கம் காண்பித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ இந்த வருடத்தின் தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன் 2023ம் ஆண்டே தனது மனைவியை பிரிந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கடந்த 2005-ல் மண வாழ்க்கையில் இணைந்தனர். இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவியுடன் பிரிவுக்கு மத்தியில் பிரதமர் பதவி ராஜினாமா செய்து தீவிர அரசியலில் இருந்து தற்போது ஒதுங்கியிருக்கிறார். இந்த நிலையில் பிரபல பாப்…