Author: Editor web3

2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு தான் மனதளவில் உடைந்து போனதாகவும், கிரிக்கெட்டை விட்டு விலக முடிவு செய்ததாகவும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்தியா அற்புதமாக விளையாடியது. தொடர்ச்சியாக ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு அணி இறுதிப் போட்டியை எட்டியது. முழு நாடும் வெற்றியைக் கனவு கண்டது, ஆனால் இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் சதம் இந்தியாவின் கனவைத் தகர்த்தெறிந்தது. அந்தத் தோல்வி ரோஹித்தை மிகவும் உலுக்கியது. 2022 இல் கேப்டன் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வெல்வதே தனது ஒரே குறிக்கோள் என்று ரோஹித் விளக்கினார். இந்த இலக்கிற்காக அவர் பல மாதங்கள் அல்ல, பல ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருந்தார். துர்திருஷ்டவசமாக அந்த போட்டியில் தோல்வியை தழுவியது இந்திய வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்கள் என அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது. இதுகுறித்து பேசிய ரோகித்…

Read More

இந்தியா ஒரு இந்து தேசம் என்றும் இதற்கு எந்த அரசியலமைப்பு அங்கீகாரமும் தேவையில்லை என்று ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பக்வத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்-இன் 100-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய பகவத், இந்தியா ஒரு இந்து தேசம் என்றும், நாட்டில் இந்திய கலாச்சாரம் மதிக்கப்படும் வரை அது அப்படியே நீடிக்கும் என்றும் கூறினார். “சூரியன் கிழக்கில் உதிக்கிறது. இது எவ்வளவு காலமாக நடக்கிறது என்று நமக்குத் தெரியாது, அப்படியென்றால் இதற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் தேவையா? இந்தியா ஒரு இந்து தேசம். இந்தியாவைத் தங்கள் தாய்நாடாகக் கருதும் எவரும் இந்திய கலாச்சாரத்தை மதிக்கிறார்கள். இந்திய மூதாதையர்களின் பெருமையை நம்பி மதிக்கும் ஒரே ஒரு நபராவது இந்திய மண்ணில் உயிருடன் இருக்கும் வரை, இந்தியா ஒரு இந்து தேசமாகவே இருக்கும். இதுவே ஆர்.எஸ்.எஸ்-இன் சித்தாந்தம்,” என்று கூறினார். நாடாளுமன்றம் அரசியலமைப்பைத் திருத்தி அந்த…

Read More

ஈரோட்டில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய்க்காக சேர்ந்த கூட்டத்தை பார்த்து உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகையும், ஆந்திர அரசியல்வாதியுமான ரோஜா கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் கடந்த 18ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, 81 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவெளியில் பரப்புரை நிகழ்த்தினார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது, பல்வேறு  எதிர்பார்ப்புகள், சூழ்ச்சிகளுக்கிடையே நடந்த இந்த நிகழ்ச்சியில், தவெக தொண்டர்கள், பொதுமக்கள் என கூட்டம் அலை மோதியது. இதுகுறித்து பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா, ஈரோட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும்போது நிஜமாகவே ஷாக்காக இருந்தது என்று கூறியுள்ளார். நாங்க கவர்மெண்ட்ல முதலமைச்சருக்கு ஒரு மாநாட்டில் மீட்டிங் நடத்த வேண்டும் என்றால், அதற்கு பல பேர் விடிய விடிய வேலை…

Read More

சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வளவோ சூழ்ச்சியை முயற்சிக்கின்றனர் ஆனால் அது என்றுமே தமிழகத்தில் வெற்றி பெறாது என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை புளியந்தோப்பு பகுதியில், நேற்று ”அன்பின் கிறிஸ்துமஸ் பெருவிழா -2025” என்ற நிகழ்சி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அதில், சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஒன்றிய பாசிச அரசு, எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்ய முயற்சிக்கிறார்கள்; அவர்களின் முயற்சி என்றைக்கும் தமிழ்நாட்டில் வெற்றி பெறாது” என்றார். கிறிஸ்துமஸ் அன்று இஸ்லாமியர்களுக்கும் சேர்த்து கேக் அனுப்புவோம், ரம்ஜான் அன்று பிரியாணி வந்து விட்டதா என்று பார்ப்போம்; இதுதான் தமிநாட்டின் தனித்துவம். தமிழ்நாட்டுக்கு தனி கேரக்டர் இருக்கிறது”  என்று பேசினார்.

Read More

மௌனம் உங்களை காப்பாற்றாது, இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள் என்று நடிகை காஜல் அகர்வால் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. வங்கதேசத்தில் மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் மீண்டும் பயங்கர கலவரம் வெடித்தது. இரண்டு பத்திரிகை அலுவலகங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், இந்திய தூதரகம் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தீபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்த இளைஞர் இஸ்லாம் மதத்தை பற்றி அவதூறாக பேசியதாக கூறி, ஒரு கும்பல் அவரை அடித்துக் கொன்று, உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் நலன் காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில், வங்க தேச வன்முறைக்கு எதிராக, முதல் பிரபலமாக நடிகை…

Read More

சென்னையில் இன்று (டிசம்பர் 22) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்களும், உலகின் பல்வேறு நாடுகளும், தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்வதால் அவற்றின் விலை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன் தினம் (டிசம்பர் 20), 20 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 400க்கு விற்பனையானது. சவரனுக்கு, 160  ரூபாய் அதிகரித்து, 99,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 229 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.99,840க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம்…

Read More

இந்து சாஸ்திரங்களின்படி, திருமணமான பெண்கள் குடும்பத்தின் லட்சுமியாகக் கருதப்படுகிறார்கள். பெண்கள் மேற்கொள்ளும் விரதங்கள் மற்றும் நற்செயல்களின் புண்ணியப் பலன்களைக் குடும்பம் முழுவதும் பெறுகிறது. இருப்பினும், பெண்கள் செய்யும் சிறிய தவறுகள் கூட வாழ்க்கையில் பெரிய சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, திருமணமான பெண்கள் இந்த ஐந்து விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்களின் திறமைக்கும் சக்திக்கும் ஏற்ப தர்மம் செய்ய வேண்டும். இருப்பினும், திருமணமான பெண்கள் தானம் செய்யும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் எதையாவது தானம் செய்யும்போது, ​​இரு கைகளாலும் கொடுக்க வேண்டும்; இது வீட்டில் சுபீட்சத்தை அதிகரிக்கும். திருமணமான பெண்கள் குளித்த பிறகு ஈரமான கூந்தலில் குங்குமம் இடக்கூடாது. ஈரமான கூந்தலுடன் வகிடு எடுப்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும், பெண்கள் தங்கள் கூந்தலை விரித்துப் போட்டுக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. திருமணமான பெண்கள் கண்ணாடி வளையல்கள், பொட்டு, குங்குமம் போன்ற தங்களின் மங்கலப் பொருட்களை யாருடனும் பகிர்ந்து…

Read More

பலர் வீட்டில் பல்வேறு வகையான செடிகளை வைத்திருக்கிறார்கள். இது வீட்டை பசுமையாகக் காண்பது மட்டுமல்லாமல், வீட்டின் உள்ளே இருக்கும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கிறது. பசுமையைப் பார்ப்பது மனநிலையைப் புத்துணர்ச்சியடையச் செய்கிறது. மனம் அமைதி பெறுகிறது. வீட்டில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கிறது. செடிகள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆனால், சில நேரங்களில் சிலர் வாஸ்து படி சரியாக இல்லாத செடிகளை வீட்டில் நடுகிறார்கள். இந்த செடிகள் உங்கள் வாழ்க்கையில் சோகம், ஏமாற்றம், நிதி நெருக்கடி மற்றும் எதிர்மறையை அதிகரிக்க ஒரு காரணியாக மாறும். தாவரங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வாழ்க்கை, மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தையும் குறிக்கின்றன. வாஸ்து சாஸ்திரம் உட்புற தாவரங்களுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. அதன் படி, சில தாவரங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருகின்றன, அதே நேரத்தில் சிலவற்றை வீட்டில் வைத்திருப்பது அசுபமாகக் கருதப்படுகிறது மற்றும் எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது. வாஸ்து நிபுணர்கள் பெரும்பாலும் சில தாவரங்களை…

Read More

வெனிசுலாவிற்கு எதிராக ஆயுதப் படையைப் பயன்படுத்துவது முழு பிராந்தியத்திற்கும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று  பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார், நேற்று நடைபெற்ற 67-வது மெர்கோசூர் மற்றும் கூட்டணி உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரேசில் அதிபர் லூலா, வெனிசுவேலாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் இராணுவ அழுத்தம் குறித்து பேசினார்.அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், கடற்படை தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் வெனிசுவேலா என்ற கரீபிய நாடில் உள்ள இராணுவ இருப்பு மிகவும் கவலைக்கிடமானவை என அவர் கூறினார். சின்ஹுவா செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, இதை வெளிப்புற பிராந்திய சக்தியொன்றால் மேற்கொள்ளப்படும் இராணுவ தலையீடு என லூலா விவரித்தார். இந்த நிலைமை முழு லத்தீன் அமெரிக்காவையும் அதிர்ச்சியடையச் செய்து, கவலைக்குள் தள்ளியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தென் அமெரிக்காவிற்கு அமைதியும் செழிப்பும் மட்டுமே உண்மையான பாதை என்று லூலா டா சில்வா திட்டவட்டமாகக் கூறினார். சர்வதேச சட்டத்தின் வரம்புகள் சோதிக்கப்பட்டு…

Read More

இந்த வாரத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட விக்சித் பாரத்—கேரண்டி ஃபார் ரோஸ்கார் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமீன்) (VB-G RAM G) மசோதா, 2025-க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்  அளித்துள்ளதாக, ஊரக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டத்தை கொண்டு வரும் நோக்கில் மத்திய புதிய மசோதா ஒன்றை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்தது. இதற்கு ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என்றும் பெயர்மாற்றம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது பாஜக தலைமையிலான மத்திய அரசு. இருப்பினும் தொடர்ந்து இந்த முடிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து, இந்த முடிவை அரசு கைவிடவேண்டும் என தெரிவித்தனர். இருப்பினும் இந்த…

Read More