Close Menu
    What's Hot

    காக்களூர் ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!. துர்நாற்றத்தால் மக்கள் அவதி!

    ஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் – அமைச்சர் வெங்கட்ரமணன் உறுதி

    ஒரே ஆண்டில் இருமுறை உயர்த்தப்பட்ட பால் விலை..! நாடு முழுவதும் பால் உற்பத்தி பாதிப்பு…!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»திகில் படம் எடுக்க பேயாக மாறணுமா? – இயக்குநர் ராம் கோபால் வர்மா கேள்வி
    சினிமா

    திகில் படம் எடுக்க பேயாக மாறணுமா? – இயக்குநர் ராம் கோபால் வர்மா கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rgv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இதில் பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் டைட்டில் அறிவிப்பு நிகழ்ச்சியில், டீஸரை அகண்ட திரையில் வெளியிட முயன்ற போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், நிகழ்ச்சி தடைபட்டது.

    அப்போது பேசிய ராஜமவுலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால், இங்கே பேசிய என் தந்தை, ஹனுமன் என்னை வழி நடத்துவதாகக் கூறினார். இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது எனக்குக் கோபம் வந்தது. இப்படித்தான் ஹனுமன் எனக்கு உதவுவாரா? என்றார். ராஜமவுலி இப்படிப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ராஷ்ட்ரிய வானரசேனா என்ற அமைப்பினர், ராஜமவுலி இந்துக் கடவுளை அவமதித்துவிட்டதாகக் கூறி போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். கடவுள் நம்பிக்கை இல்லை என்பவர், தன் படத்துக்கு ‘வாரணாசி’ என்று தலைப்பிட்டு புராணக் கதாபாத்திரங் களைப் பயன்படுத்தியது ஏன்? என ராஜமவுலிக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன.

    இந்நிலையில் இயக்குநர் ராம் கோபால் வர்மா, ராஜமவுலிக்கு எதிராகப் பரப்பப்படும் விமர்சனங்களைக் கடுமையாகச் சாடியுள்ளார். அவர் வெளியிட்டப் பதிவில், “கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருப்பது குற்றமல்ல என்பதை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தாங்கள் நம்புவதாகச் சொல்லும் உரிமையைப் போலவே, நம்பவில்லை என்று சொல்லவும் அவருக்கு முழு உரிமை உண்டு.

    இப்போது, ‘அவர் கடவுளை நம்பவில்லை என்றால், அவர் ஏன் தனது படங்களில் கடவுளைக் காட்டுகிறார்?’ என்று கேட்பது முட்டாள்தனமான வாதம். அந்த தர்க்கத்தின்படி, ஒரு கேங்ஸ்டர் படம் எடுக்க இயக்குநர் கேங்ஸ்டராக மாற வேண்டுமா, திகில் படம் எடுக்கப் பேயாக மாற வேண்டுமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆஸ்திரேலியாவுக்கு இவ்வளவு கோடி நஷ்டமா !!! சீக்கிரமாக நடந்து முடிந்ததால் வந்த சிக்கல்
    Next Article விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட தமிழக உரிமை விற்பனையில் நடந்தது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    AI மிகவும் ஆபத்தானது..! தந்தையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ருதிஹாசன்..!

    July 7, 2026

    மலையாள சினிமாவில் அதிரடி திருப்பம்.. ‘அம்மா’ அமைப்பை விட்டு வெளியேறிய ரேவதி, பத்மபிரியா..!!

    July 7, 2026

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காக்களூர் ஏரியில் கொத்து கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!. துர்நாற்றத்தால் மக்கள் அவதி!

    ஓரிரு வாரங்களில் புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் – அமைச்சர் வெங்கட்ரமணன் உறுதி

    ஒரே ஆண்டில் இருமுறை உயர்த்தப்பட்ட பால் விலை..! நாடு முழுவதும் பால் உற்பத்தி பாதிப்பு…!

    தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தியில் புதிய உச்சம் – ஒரே நாளில் 60.4 மில்லியன் யூனிட் பதிவு

    கல்விக் கட்டணம் – தனியார் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.