Close Menu
    What's Hot

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூர் : வேலை தேடி வந்த பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்..! தலைமறைவான ஆசாமிக்கு வலைவீச்சு..!
    தமிழ்நாடு

    திருப்பூர் : வேலை தேடி வந்த பெண்ணுக்கு பாலியல் அத்துமீறல்..! தலைமறைவான ஆசாமிக்கு வலைவீச்சு..!

    Editor web4By Editor web4June 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேலூரை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வேலை தேடி ரயில் மூலம் திருப்பூருக்கு வந்துள்ளார். நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவர் திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் செய்வதறியாது நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர், தனியாக நின்றிருந்த அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

    அப்போது அந்த பெண் தான் வேலை தேடி இங்கு வந்திருப்பதாக கூறினார். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர், தான் ஒரு பனியன் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்வதாகவும், நினைத்தால் உடனே வேலை வாங்கித் தர முடியும் என்றும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணை தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் அழைத்துச் சென்றுள்ளார்.

    நள்ளிரவு 1 மணி அளவில், அந்த பெண்ணை திருப்பூர் நல்லூர் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டமற்ற காட்டுப்பகுதிக்கு அந்த வாலிபர் கடத்திச் சென்றுள்ளார். அங்கு வைத்து அந்த பெண்ணிடம் வாலிபர் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டு, பலாத்காரம் செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண், அவரிடம் இருந்து தப்பிக்க காட்டுப்பகுதியில் அலறியடித்துக் கொண்டு கூச்சலிட்டபடி ஓடியுள்ளார்.உயிருக்கு பயந்து காங்கயம் ரோட்டை நோக்கி ஓடி வந்துள்ளார்.

    அப்போது புதுப்பாளையம் பகுதியில் நள்ளிரவிலும் திறந்திருந்த ஒரு பேக்கரிக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களிடம் தஞ்சம் புகுந்து, தனக்கு நேர்ந்த கொடூரத்தை அழுதுகொண்டே கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பேக்கரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வருவதற்குள், அந்த இளைஞர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.

    இச்சம்பவம் குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு விசாரணை நடத்தி வரும் போலீசார், பேருந்து நிலையம் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய அந்த இளைஞர் யார்? என்று தீவிரமாக தேடி வருகின்றனர்.

    sexual assault tamilnadu tripur தமிழ்நாடு திருப்பூர் பாலியல்தொல்லை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடுரோட்டில் கஞ்சா போதை வன்முறை!. திருப்பூரில் அரங்கேறிய கொடூரம்!
    Next Article நடுரோட்டில் டூவீலர் சீட்டில் படுத்துக்கொண்ட மலைப்பாம்பு!. அலறியடித்து ஓடிய மக்கள்!
    Editor web4

    Related Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    June 21, 2026

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    June 21, 2026

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீட் மறு தேர்வு தொடங்கியது… 22.79 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    “சத்துணவுக்கு பதில் பிஸ்கட்டா?” – விஜய் அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.