Close Menu
    What's Hot

    முடிவுக்கு வந்த போர்..!! பாக். பிரதமர் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்..!!

    டெல்லியில் சுட்டெரிக்கும் வெயில்!. குரங்குகளுக்கு ஐஸ் வழங்கி மனிதாபிமானம் காட்டிய வியாபாரி!

    பத்திக்கிச்சு உலகக்கோப்பை ஃபுட்பால் ஜுரம்..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»காட்டு யானை தாக்கியதில் சுக்குநூறாக நொறுங்கிய இளம்பெண்ணின் கால்!. கிருஷ்ணகிரியில் தொடரும் சோகம்!
    Featured

    காட்டு யானை தாக்கியதில் சுக்குநூறாக நொறுங்கிய இளம்பெண்ணின் கால்!. கிருஷ்ணகிரியில் தொடரும் சோகம்!

    Editor web3By Editor web3June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    krishnagiri elephant attack
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, காட்டு யானை தாக்கியதில் வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கால் உடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேன்கனிக்கோட்டை வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக நான்கு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அவ்வப்போது விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்நிலையில், ஆலஹள்ளி பகுதியில் உள்ள நர்சரி பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்த ரீமா (18) என்ற வடமாநில இளம்பெண்ணை, எதிர்பாராத விதமாக காட்டு யானை தாக்கியது.

    யானையின் தாக்குதலில் ரீமாவின் இடது கால் பலத்த காயமடைந்து சுக்குநூறாக நொறுங்கியது. ரத்த வெள்ளத்தில் துடித்த அந்தப் பெண்ணைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர், அவரை மீட்டு உடனடியாக மேடு இருதிக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு, வனத்துறையினரின் உதவியுடன் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாகவே இந்த யானைகளின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகரித்து வருவதாகவும், இதனால் நிம்மதியாக வெளியே வரக்கூட முடியவில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டவும் வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    elephant attack krishnagiri leg shattered Young woman
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தமிழக சட்டமன்றத்தில் புதிய உதயம்”: ஆளுநர் அர்லேகர் மகிழ்ச்சி!
    Next Article எலான் மஸ்க் வரலாற்று சாதனை..!! SpaceX பங்குச் சந்தையில் அமேசானைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடம்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    முடிவுக்கு வந்த போர்..!! பாக். பிரதமர் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்..!!

    June 18, 2026

    டெல்லியில் சுட்டெரிக்கும் வெயில்!. குரங்குகளுக்கு ஐஸ் வழங்கி மனிதாபிமானம் காட்டிய வியாபாரி!

    June 18, 2026

    பத்திக்கிச்சு உலகக்கோப்பை ஃபுட்பால் ஜுரம்..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முடிவுக்கு வந்த போர்..!! பாக். பிரதமர் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்..!!

    டெல்லியில் சுட்டெரிக்கும் வெயில்!. குரங்குகளுக்கு ஐஸ் வழங்கி மனிதாபிமானம் காட்டிய வியாபாரி!

    பத்திக்கிச்சு உலகக்கோப்பை ஃபுட்பால் ஜுரம்..!! திருப்பூரில் டீ-சர்ட் விற்பனை படுஜோர்..!!

    சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!

    தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிரடி: பொன்னேரி கரை போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.60,000 பறிமுதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.