Close Menu
    What's Hot

    ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பசுவதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!
    தமிழ்நாடு

    பசுவதை தடை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

    Editor web2By Editor web2July 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Court hammer
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பசுக்கள் பொது இடங்களில் வெட்டப்படுவதற்கு தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் சூர்ய பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘தமிழகத்தில் எந்த நாளிலும் பசுக்கள் மற்றும் கன்றுகளை கொல்ல மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது. எனவே, மே 28 பக்ரீத் பண்டிகைக்கு முந்தைய நாளோ, மறு நாளோ மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பசுவோ அல்லது கன்றோ கொல்லப்படாமல் இருப்பதை தலைமைச் செயலாளரும் காவல் துறை தலைவரும் உறுதி செய்ய வேண்டும்’ என்று மே 27-ம் தேதி உத்தரவிட்டது.

    மேலும், விலங்குகளைக் கொல்லுதல் என்பது அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.

    supreme court

    இந்த உத்தரவை எதிர்த்து ஜூலை 1-ம் தேதி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது தமிழக அரசு சார்பில், ‘விலங்குகளைக் கொல்லுதல் என்பது அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக் கூடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என்று உயர் நீதிமன்றம் சரியாகக் குறிப்பிட்டிருந்தாலும், பக்ரீத் அல்லது வேறு எந்த நாளிலும் பசு அல்லது கன்றைக் கொல்லக் கூடாது என்றும் அது உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் முரண்பாடானவை. மேலும், மனுதாரரின் கோரிக்கைக்கும் மேலாகச் சென்று இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தத் தீர்ப்பு, தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1958-ன் விதிகளுக்கு முரணானது. இந்த சட்டத்தின்படி, 10 வயதுக்கு மேற்பட்ட வேலைக்கோ, இனப்பெருக்கத்துக்கோ தகுதியற்ற பசுக்களை தகுந்த அதிகாரியிடம் இருந்து சான்றிதழ் பெற்று பிறகு கொல்ல அனுமதிக்கப்படுகிறது’ என வாதிடப்பட்டது.

    இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் கடைசி பத்தியில் திருத்தம் தேவைப்படுவதாகத் தோன்றுகிறது என தெரிவித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    CowSlaughter MadrasHighCourt supremecourt tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுளித்தலை; முதலமைச்சரை விமர்சித்து முகநுலில் பதிவு – திமுக ஐ.டி. விங் பிரமுகர் கைது
    Next Article தவெகவில் இணைந்தது ஏன்? – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்
    Editor web2
    • Website

    Related Posts

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    July 13, 2026

    பெரம்பூரில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ; எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்

    July 13, 2026

    தவெகவில் இணைந்தது ஏன்? – எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்

    July 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் வீராங்கனை விருது –  ஸ்ரீ சரணி உட்பட 3 பேர் பரிந்துரை

    குதிரை பேர அரசியல், சட்டம் – ஒழுங்கு சீர்கேடு: தவெக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

    ISSF உலகக் கோப்பையில் இந்தியா தங்கம் – வரலாற்று சாதனை படைத்த நீரு தண்டா

    ஏ.சி . ரயில் பெட்டிகளில் 1.27 கோடி போர்வை, பெட்ஷீட், டவல் திருட்டு- அதிர்ச்சி தகவல்

    பெரம்பூரில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ; எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.