தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியைத் தொடங்கி மூன்றாண்டுகளிலேயே தமிழக சட்டமன்ற தேர்தலில் தனி ஒருவனாக யாருடனும் கூட்டணி வைக்காமல் 108 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள விஜய்,  75 ஆண்டுகால திமுக, 50 ஆண்டுகால அதிமுக கட்சிகளுக்கு எல்லாம் பேரிடியைக் கொடுத்திருக்கிறார்.

தமிழக சட்டமன்றத்தில் தவெகவின் கொடி பறக்க இன்னும் 12 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்னும் சூழலில், யாரெல்லாம் தவெகவுக்கு ஆதரவு தருவார்கள் என்னும் விவாதம் தமிழக அரசியல் களத்தில் அனலடித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக அதிரடியாகத் தெரிவித்துள்ளது. இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது.

இதே போல், தவெகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அதிமுகவுக்குள்ளும் கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. சி.வி.சண்முகம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version