னடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2025-ஆம் ஆண்டுக்கான ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ ஓவியர் டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், டிராட்ஸ்கி மருது நேர்த்தியான கோட்டோவியராக மட்டுமல்லாமல், அனிமேஷன் மற்றும் கணினி வரைகலை போன்ற நவீன கலைத் துறைகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருபவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது திறமையைப் பயன்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவரை தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக திராவிட மாடல் அரசில் நியமித்ததாகவும், 2023-ஆம் ஆண்டு தமிழக அரசின் செய்தித்துறை வெளியிட்ட இலக்கிய மலரிலும் அவரது பங்களிப்பு இடம்பெற்றதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘வாளோர் ஆடும் அமலை’ போன்ற படைப்புகள் மூலம், தமிழர் வரலாற்றைப் பற்றிய தவறான புரிதல்களை மாற்றுவதிலும் டிராட்ஸ்கி மருது முக்கிய பங்காற்றியுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

தமிழ் மரபையும் உலகின் நவீன கலை மற்றும் சிந்தனைப் போக்குகளையும் இணைக்கும் பாலமாக விளங்கி வரும் டிராட்ஸ்கி மருதுவின் வாழ்நாள் சாதனைகளுக்கான தகுந்த அங்கீகாரமாக இந்த ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’ அமைந்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version