கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது தொடர் சரிவை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து எதிர்பாராத வகையில் உயர்ந்த தங்கம் விலை, பல்வேறு நாடுகளுக்கிடையேயான போர் பதற்றம் போன்ற காரணங்களால் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகிறது. கடந்த ஜூன் 14 ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.9,320 ஆகவும், ஒரு பவுன் ரூ.74,560 ஆகவும் விற்பனையாகி வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.

 

 

ஜூன் 21 ஆம் தேதி முதல் தங்கம் விலை சரிவைச் சந்திக்கத் தொடங்கியது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.9,235 ஆகவும், ஒரு பவுன் ரூ.73,880 ஆகவும் இருந்தது. ஜூன் 22 ஆம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஜூன் 23 ஆம் தேதி பவுனுக்கு ரூ.40 குறைந்து*ரூ.73,840 ஆக விற்பனையானது.

 

கடந்த ஜூன் 24 ஆம் தேதி, ஒரு கிராம் தங்கம் ரூ.75 குறைந்து ரூ.9,150 ஆகவும், ஒரு பவுன் ரூ.600 குறைந்து ரூ.73,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 25 ஆம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிராம் ரூ.9,070 ஆகவும், ஒரு பவுன் ரூ.72,560 ஆகவும் இருந்தது. ஜூன் 26 ஆம் தேதி விலையில் மாற்றமில்லை.

நேற்று (ஜூன் 27) தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.8,985 ஆகவும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.71,880 ஆகவும் விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.120 ஆகவும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாகவும் இருந்தது.

இன்றைய விலை நிலவரம்

இன்றும் தங்கத்தின் விலை சரிவைத் தொடர்கிறது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து ரூ.8,930 ஆக விற்பனையாகிறது. ஒரு பவுன் தங்கம் ரூ.440 குறைந்து ரூ.71,440 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.119 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 19 ஆயிரமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த நான்கு நாட்களில் மட்டும் தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.1,400 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதார நிபுணர்கள், தங்கம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version