Close Menu
    What's Hot

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»லோக் ஆயுக்தா சட்டம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
    தமிழ்நாடு

    லோக் ஆயுக்தா சட்டம்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 law
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிப்பதற்காக, மத்திய அரசு, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தை 2013 ஆம் ஆண்டு இயற்றியது. இந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம், 2018 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2018 நவம்பர் முதல் அமலுக்கும் வந்தது.

    இந்நிலையில், இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தஞ்சாவூரைச் சேர்ந்த வி.ஜீவகுமார் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு லோக் ஆயுக்தா சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2019 முதல் 2024 வரை 617 புகார்களை முடித்து வைத்துள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு டிசம்பர் வரை 137 புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும் லோக் ஆயுக்தா இணையதளத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை வழக்குகளில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது; நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன நிலையில் உள்ளன என்ற விவரங்கள் ஏதும் குறிப்பிடப்படவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மேலும், லோக் ஆயுக்தா செயலாளராக, துணை செயலாளர் அந்தஸ்து அதிகாரியை நியமிக்க கூறியுள்ள நிலையில்,  ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள மாவட்ட நீதிபதியை செயலாளராக நியமிக்கும் வகையில் விதிகளை திருத்தி, 2020 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசு சட்டத்தை மீறிய செயல் என்பதால், செயலாளர் நியமனம் தொடர்பாக விதிகளை திருத்தி வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழக மனிவள மேம்பாட்டு துறை, உள்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளது.

    Chennai High Court Lokayukta Act Madras High Court Tamil Nadu government
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபல.. பல.. பிளான்..!! பக்கா ஸ்கெட்ச் உடன் 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல் காந்தி..!!
    Next Article மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து!. பட்டாசு சதிக்கு மைதானத்தில் பதிலடி!
    Editor TN Talks

    Related Posts

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    July 6, 2026

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    July 6, 2026

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பாஸ் ஸ்கேம்’ மோசடி: ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ரூ.38.5 லட்சம் பறிக்க முயற்சி!

    “கவர்ச்சி மாயையை நம்பி வாக்களித்த மக்கள் இப்போது உணரத் தொடங்கியுள்ளனர்”

    நேரில் தவெக அரசுக்கு பாராட்டு; அறிக்கையில் திட்டு- அன்புமணியின் புதிர் அரசியல்!

    தமிழகத்தில் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்…  எந்தெந்த நகரங்களில் இயக்கப்படும்?

    மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தீர்மானம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.