சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஷன் குமார் (22) என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 7:30 மணியளவில் மாணவி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தபோது, ரோஷன் குமார் கையில் கட்டையுடன் வந்துள்ளார். அவர் மாணவியின் முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சத்தமிடவே, ரோஷன் குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாணவி ஐஐடி காவலாளிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் ஐஐடி வளாகத்தில் உள்ள “மும்பை சாட்” (Mumbai Chaat) என்ற கடையில் பணிபுரிந்து வந்த ரோஷன் குமார் என்பது தெரியவந்தது. நேற்று உடல்நிலை சரியில்லை எனக் கூறி விடுப்பு எடுத்திருந்த ரோஷன், இரவு நேரத்தில் தனியாக வந்த மாணவியைத் தாக்கி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.

இதையடுத்து, ரோஷன் குமாரை கோட்டூர்புரம் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version