Author: Editor TN Talks

திண்டுக்கல் மாவட்டத்தில் 98பட்டி தாய் கிராமமான மேட்டுப்பட்டியில் அமைந்துள்ளது காளியம்மன், பகவதியம்மன் கோயில். ஆண்டுதோறும் இக்கோயிலில் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுகான 381-வது வைகாசி திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பூக்குழி இறங்கும் நிகழ்வு இன்று (21.05.2025) காலை தொடங்கியது. இதில் காப்பு கட்டிய பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் வகையில் கையில் குழந்தைகளோடும், காளியம்மன், பகவதி அம்மன் மற்றும் கருப்பணசாமி ஆகிய சாமிகளின் வேடமணிந்து சுமார் 200-க்கும் மேற்பட்டொர் பூக்குழி இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். தலைவர் ஊர் நாட்டாமை அழகர்சாமி தலைமையில், துணை தலைவர் அரசு ஒப்பந்ததாரர் மேட்டுப்பட்டி முருகன், செயலாளர் கைலாசம், பொருளாளர் முருகன், இணை பொருளாளர் வினோத் குமார், ஊர் சேர்வை முருகேசன் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர். மேலும்…

Read More

ரஜினிகாந்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் ‘ஜெயிலர் 2’ தற்போது பரபரப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் தலையாய நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். சினிமா வட்டார தகவல்களின் படி, பாலகிருஷ்ணா இப்படத்தில் சிறப்புத் தோற்றமாக வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே தோன்ற உள்ளார். அதிலும் ஒரு மாஸ் ஃபைட் சீன் மற்றும் ஒரு ப்ளாக்பஸ்டர் ஷூட்டிங் செட் பின்னணியில் நடைபெறும் சிக்கலான காட்சி அடங்கும். இந்த 10 நிமிட காட்சிக்காகவே அவருக்கு ரூ.22 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தில், பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் இடையிலான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகப் பெரிய நட்சத்திர கூட்டணியுடன் உருவாகி வரும் நிலையில், பாலகிருஷ்ணாவின் வருகை இந்த படத்துக்குச் சிறப்பே சேர்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

தமிழகத்தில் அனுமதியின்றி உருவான மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை அரசு மேலும் 12 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம், இதுவரை அவகாசத்தை பயன்படுத்த முடியாத மனையர்கள் இன்னும் ஒரு வாய்ப்பு பெறுகின்றனர். அதன்படி, 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு இருக்கலாம். அவ்வாறு விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள கடந்த ஆண்டு பிப்ரவரி 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதனை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு நகர் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் கடிதம் எழுதியிருந்தது. எனவே, 2016-ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி. தேதி அல்லது அதற்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்டிருந்த மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறை செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்ட…

Read More

45 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் வசந்த உற்சவத்தில் இசைக்கப்பட்ட தங்க நாதஸ்வரம். திரளான பக்தர்கள் மெய் சிலிர்த்து நாதஸ்வர இசையுடன் சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றானது நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில். இத்திருக்கோவிலில் ஆண்டின் 12 மாதங்களும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும். இத்திருகோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் வசந்த உற்சவம் வெகு விமர்சையான விழாவாகவும் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின் 17 நாட்கள் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி வசந்த உற்சவம் நடைபெறும் இந்த உற்சவத்தின் போது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் எழுந்தருளும் மண்டபம் வெட்டிவேர்களால் அலங்கரிக்கப்பட்டு குளிர்ச்சியூட்டக்கூடிய அனைத்து வகையான பொருட்களும் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான வசந்த உற்சவ திருவிழா கடந்த 13ஆம் தேதி தொடங்கியது.சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் நீர் நிரப்பப்பட்ட வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.கோடை…

Read More

கணவன் மனைவி இடையே நெருக்கமும் அன்பும் அதிகரிக்க 10 பொருத்தமும் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். மண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நீடித்திருக்க நம் வீட்டில் உள்ள படுக்கை அறையில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். நம்முடைய மனதில் நேர்மறை எண்ணங்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல வீட்டிலும் நேர்மறை அதிர்வுகள் அதிகரிக்கும். நாம் வசிக்கும் வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் அதிகம் இருந்தால் அந்த வீடு போர்க்களமாகவே இருக்கும். இல்லத்தரசிகள் அதிகம் இருக்கும் இடம் சமையல்அறைதான். அந்த அறை பொதுவாக அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு திசையில் மட்டுமே இருக்க வேண்டும். ஒரு சிலர் வடமேற்கில் வைத்திருப்பார்கள் பரவாயில்லை. ஆனால் தவறியும் கூட ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு தென்மேற்கு எனப்படும் கன்னி மூலையில் படுக்கை அறையை வைத்து விடக்கூடாது. மிகப்பெரிய வீடு கட்டி படுக்கை அறையில் அலங்காரங்கள் செய்து வைத்து பஞ்சு மெத்தையில் படுத்தாலும் சிலருக்கு…

Read More

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுக்கா, ஏம்பலம் அடுத்த சோகத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் வயது லாரி ஓட்டுநர்.இவர் வயதான தனது தாய் நவநீதம் என்பவரோடு வாழ்ந்து வருகிறார். விஜயகுமார் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். விஜயகுமார் திருமணம் செய்ய பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டு கடந்த ஐந்து வருடமாக பெண் தேடிவந்துள்ளார். திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலையில் நண்பர்களோடு உதவியோடு ஒரு சமூகத்தைச் சார்ந்த வன்னியர் மேட்ரிமோனி வலைதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளார். விஜயகுமார் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டும் படித்துள்ள நிலையில் பெரிதாக சமூக வலைதளத்தில் அனுபவம் இல்லாததால் வரன்கள் பார்ப்பதில் இவருக்கு ஆர்வம் இல்லாமல் செல்போனில் இருந்த தனியார் வரன் பார்க்கும் வன்னியர் மேட்ரிமோனி செயலியை மட்டும் டெலிட் செய்துள்ளார். ஆனால் பதிவை நீக்காமல் இருந்துள்ளார். இந்த நிலையில் பிப்ரவரி மாதம் விஜயகுமாருக்கு பிரியங்கா என்ற 28 வயது பெண்மணி போன் செய்து…

Read More

நேற்றைய தினத்தினை தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச்சந்தை இன்றும் (மே 20) சரிவுடன் முடிவடைந்தது. பெரிய நிறுவனங்கள் உள்பட அனைத்து துறை பங்குகளும் புள்ளிப் பட்டியலில் சரிவுடன் காணப்பட்டன. டாடா ஸ்டீல், இன்ஃபோசிஸ் ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே சாதகமான சூழலில் இருந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 872.98 புள்ளிகள் சரிந்து 81,186.44 புள்ளிகளாக நிறைவடைந்தது. இது, மொத்த வணிகத்தில் 1.06% சரிவாகும். தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.55 புள்ளிகள் சரிவடைந்து 24,683.90 புள்ளிகளாக நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது, 1.05% சரிவாகும். இதையும் படிக்க: “‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டம்..” பிரதமர் மோடி புகழாரம்! நேற்றும் பங்குச்சந்தை சரிவுடனே நிறைவடைந்தது. சென்செக்ஸில் மட்டும் ரூ.443.67 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன. இதன்மூலம் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.47 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்குச்சந்தை…

Read More

இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். உலக சுகாதார நிறுவனத்தின் 78வது கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இந்தியாவில் செயல்படுத்தப்படும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம் உலகின் மிகப்பெரிய காப்பீட்டு திட்டமாகும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 58 கோடி பேர் பயன் பெறுவதாகவும், தற்போது, இந்த திட்டத்தின் கீழ் 70 வயதுக்கும் மேற்பட்டவர்களையும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான சுகாதார மையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, அங்கு பரிசோதனை செய்வதுடன், புற்றுநோய், நீரிழிவு மற்றும் மன அழுத்தம் உள்ளிட்டவை ஆரம்பநிலையில் கண்டறியப்படுவதாக தெரிவித்தார். லட்சக்கணக்கான மக்களுக்கு டிஜிட்டல் சுகாதார அடையாளம் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதன் மூலம், ஒருங்கிணைந்த பலன்கள், காப்பீடு, ஆவணங்கள் மற்றும் தகவல்களை பெற முடிவதாகவும் குறிப்பிட்டார். ஜூன் 11ல் சர்வதேச யோகா…

Read More

பிரசித்தி பெற்ற சபரிமலையில் மே மாதத்திற்கு ஏற்ப நடைபெற்ற மாதாந்திர பூஜைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இதையடுத்து, ஹரிவராசனம் பாடலுடன் சாமி நடை நேற்று அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. மலையாள இடவம் மற்றும் தமிழ் வைகாசி மாதப் பிறப்பை முன்னிட்டு, மாதாந்திர பூஜைக்காக கடந்த மே 14 ஆம் தேதி திறக்கப்பட்டது பிரசித்தி பெற்ற சபரிமலை நடை. அன்று மாலையே 15 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நடை திறந்த மே 14ம் தேதி மாலை 5 மணி முதல் 10 மணிக்குள் 15 ஆயிரம் பக்தர்கள் சாமி தசனம் செய்தனர்.மறுநாள் மே 15ம் தேதி துவங்கி பக்தர்கள் வருகை 29,000, 33,000, 37,878 என்று அதிகரித்த பக்தர்கள் கூட்டம் 18ம் தேதியான ஞாயிற்றுக் கிழமை 9,982 ஆக குறைந்து .19ம் தேதி அதை விடவும் குறைந்தது. மே 18, 19 தேதிகளில் குடியரசுத் தலைவர் சபரிமலை வருகை திட்டம் இருந்தது. இதனால்…

Read More

இந்திய அரசின் நிதி மற்றும் அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் நடத்தும் வருடாந்திர கூட்டம், மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பதவியில் உள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டுக்கான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மே 23 ஆம் தேதி இரவு டெல்லி செல்லவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையும் படிக்க: தோழி விடுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! கடந்த ஆண்டு…

Read More