Author: Editor web3

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரங்களுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு குறித்துப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரத்தின்போது, தவெக தலைவர் விஜய்க்கு முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெரம்பூரில் இருந்து கொளத்தூர் நோக்கிச் சென்ற விஜய்யின் வாகனத்திற்குத் போக்குவரத்து ஒழுங்குமுறை மற்றும் போதிய காவலர்கள் பாதுகாப்பு இல்லை என தவெக குற்றம்சாட்டியுள்ளது. “அனுமதி பெற்றும் பாதுகாப்பு வழங்காதது ஜனநாயக விரோதம்” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசல் காரணமாக வில்லிவாக்கத்தில் திட்டமிடப்பட்ட பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கிடையே, திமுக தொண்டர்கள் திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெரும் கூட்டத்திற்கு மத்தியில் தடையின்றிப் பிரச்சாரம் செய்ததைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிடும் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் நாளை மறுநாள் (ஏப்ரல் 2) பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் (ECI) முறையான அனுமதி கோரி தவெக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அன்று காலையில் திருச்சி கிழக்குத் தொகுதிக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு, அதனைத் தொடர்ந்து தொகுதிக்கு உட்பட்ட முக்கியப் பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க அவர் முடிவு செய்துள்ளார். தவெகவின் செங்கோட்டையன் இதற்கு அனுமதி கேட்டு மனு ஒன்றை காவல் ஆணையரிடம்   வழங்கினார். சென்னையில் நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்தின்போது ஏற்பட்ட அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, திருச்சியில் கூடுதல் திட்டமிடலுடன் களமிறங்க அவர் தயாராகி வருகிறார். காவல் பல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிகின்றது. விஜய்செல்லும் வழியெல்லாம் வாகனங்கள் பின்பற்றக்கூடாது என்பது போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. முன்னதாக, நேற்று பெரம்பூரில் விஜய் மேற்கொண்ட…

Read More

பீகார் மாநிலம் நாளந்தாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து நிதியுதவி அறிவித்துள்ளார். பீகாரின் நாலந்தாவில் உள்ள ஒரு கோவிலில் இன்று ( மார்ச் 31 ) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியான மனதை உலுக்கும் புகைப்படங்களில், ஏராளமான பெண்கள் தரையில் சுயநினைவின்றி கிடந்தது தெரியவந்தது. சிலர் அந்த பெண்களுக்கு முதலுதவி செய்வதுவருகின்றனர். இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நாளந்தாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 8 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க,…

Read More

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான ஹைதராபாத் இல்லத்தைச் சொத்து வரி பாக்கி காரணமாக மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து முடக்கியுள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் (யுசுஃப்குடா பகுதி) மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான நான்கு மாடி பங்களா ஒன்று உள்ளது. இந்த இல்லத்திற்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தப்படவில்லை என கூறப்படுகிறது. நிலுவையில் உள்ள வரி மற்றும் அபராத வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.1.60 கோடி பாக்கி உள்ளதாக ஹைதராபாத் மாநகராட்சி (GHMC) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி மாதமே நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அதற்கான உரியப் பதில் அளிக்கப்படாததால் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் நேற்று (மார்ச் 30) அந்த இல்லத்திற்கு நேரில் சென்று சீல் வைத்தனர். தற்போது அமலில் உள்ள ‘ஒரே முறை தீர்வு’ (One-Time…

Read More

தேனி மாவட்ட திமுகவின் முகமாகத் திகழ்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளரும், அக்கட்சியின் தீர்மானக் குழு இணைச் செயலாளருமான ஜெயக்குமார், இன்று தனது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் அதிமுகவில் இணைந்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த இணைப்பின் போது, ஜெயக்குமாருக்கு அதிமுகவின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. ஓ. பன்னீர்செல்வம் (OPS) திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த பிறகு, தேனி மாவட்ட திமுகவில் பழைய நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற அதிருப்தி நிலவி வந்த நிலையில், இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஜெயக்குமார், ஒருங்கிணைந்த தேனி மாவட்டத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுபவர். குறிப்பாகக் கூடலூர், கம்பம் மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் இவருக்குப் பெரும் மக்கள் செல்வாக்கு உள்ளது. கடந்த காலங்களில் இரண்டு முறை ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக அபார வெற்றி பெறுவதற்கு இவரது தேர்தல் வியூகங்களே முக்கியக் காரணமாக அமைந்தன.…

Read More

ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்  விதிக்கும் மசோதாவுக்கு ஈரான் நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஈரானின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த வரி வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் அல்லது தடை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெய்யில் சுமார் 20% இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. தற்போது இந்த மசோதாவின் படி, கப்பல்கள் ஈரானின் தேசிய நாணயமான ரியால் (Rial) மூலமாகவே கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில கப்பல்களிடம் ஒரு பயணத்திற்கு சுமார் $2 மில்லியன் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச கடல்சார் சட்டங்களுக்கு (UNCLOS) எதிராக ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக வளைகுடா…

Read More

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். கடந்த சில நாட்களாகக் காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொடர்பான ஒவ்வாமை காரணமாகத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த அவருக்கு, சிறப்பு மருத்துவர்கள் குழு தொடர் சிகிச்சை அளித்து வந்தது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சோனியா காந்தியின் உடல்நிலை குறித்துப் பரவி வந்த பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிய சோனியா காந்தியை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தற்போது அவர் தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் நிலையில், முழுமையாகக் குணமடைய இன்னும் சில நாட்களுக்குப் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு…

Read More

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று சென்னை பெரம்பூர் மற்றும் கொளத்தூர் தொகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் கேட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நேற்று (30) பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து பெரம்பூர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அப்போது திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் அந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முறையான அனுமதி பெறாமல் கூட்டத்தைக் கூட்டியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது போன்ற காரணங்களுக்காக, பெரவள்ளூர் காவல்துறையினர் விஜய் உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்தப் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்ததாக தவெக தரப்பிலும் தேர்தல்…

Read More

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி,  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் மிகவும் வினோதமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வேளாண்மைத் துறையுடன் இணைந்து விவசாயிகளிடையே இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதாவது வயலில், 100% என்ற வடிவத்தில் நெல் நாற்றுகளை  நட்டு, வாக்களிப்பதன் அவசியத்தை அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கினர். விவசாயப் பணிகளுக்கு இடையே உழவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை மறக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம் எனத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அங்கிருந்த விவசாயிகளிடம் தேர்தல் நாளன்று தவறாமல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

Read More

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது, ரவீந்திர ஜடேஜா உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசனில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று (மார்ச் 30, 2026) கௌஹாத்தியில் நடைபெற்ற சிஎஸ்கே – ராஜஸ்தான் மோதலில், ஜடேஜா தனது முன்னாள் அணியான சிஎஸ்கே-வை எதிர்கொண்டார். போட்டியின் போது சிஎஸ்கே ரசிகர்கள் ‘ஜட்டு… ஜட்டு…’ என உற்சாகமாக முழக்கமிட்டனர். அப்போது எல்லையோரம் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த ஜடேஜா, ரசிகர்களின் அன்பால் நெகிழ்ந்து கண்ணீர் மல்க நின்ற காட்சிகள் கேமராவில் பதிவாகின. https://x.com/DinaMaalai/status/2038868654918685108? இப்போட்டியில் ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். குறிப்பாக ஷிவம் துபே விக்கெட்டை வீழ்த்திய பின் அவர் செய்த ‘கன் செலிப்ரேஷன்’ (Gun Celebration) வைரலானது. போட்டிக்குப் பின் பேசிய…

Read More